வெள்ளி, 24 மே, 2019

திருமாவளவனின் வெற்றி .. கடும் போர்முனையில் களமாடி பெற்ற வெற்றி!

Sivasankaran Saravanan : தலைவர் திருமாவளவன் குறைந்த வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் அவரது இந்த வெற்றியை மகத்தான சாதனையாக கருதுகிறேன். பலரும் சொல்வது போல் அவர் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் இந்த இழுபறியே இருந்திருக்காது. என்றாலும் அவரது சுய அடையாளம் இன்று காப்பாற்றப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார் அதிகாரப்பூர்வமாக கட்சியை விட்டு நீக்கப்பட்டு திமுக உறுப்பினராக மாறுகிறார். மறுநாள் வேட்பு மனுத்தாக்கல் அன்று வேண்டுமென்றே பாமக வழக்கழிறஞர்கள் , அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் , அவர் எப்படி உதயசூரியன் சின்னத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என கேட்கின்றனர். பாமக வழக்கறிஞர்கள் ஒன்றும் ஏதுமறியா குழந்தைகள் அல்ல. இருந்தாலும் ரவிக்குமார் வாயால் அது வரவேண்டும் என கிடுக்கிப்பிடி போடுகிறார்கள். ரவிகுமார் தரப்பும் அவர் திமுக உறுப்பினராகிவிட்டார் என்ற சான்றுகளை தேர்தல் அதிகாரியிடம் காட்டுகிறார்கள்.
இதேபோன்ற ஒரு நெருக்கடியை திருமாவளவனுக்கும் தர பாமக திட்டமிட்டது. விசிக வின் நிறுவன தலைவரே விசிகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டார் என்பதை தம்பட்டம் அடித்து அவரது இமேஜை காலி செய்யவேண்டும் என்பது அவர்களது திட்டம். அதை உணர்ந்த திருமாவளவன் வெற்றி வாய்ப்பை பற்றி பெரிதும் கவலைப்படாமல் துணிந்து தனிச்சின்னமாம் பானை சின்னம் கண்டார்.

உதய சூரியன் சின்னத்தில் நிற்பது என்பது ரொம்பவும் பாதுகாப்பானது. தங்கள் வீட்டு சுவரில் உதயசூரியன் சின்னத்தை வரையக்கூடாது என தமிழ்நாட்டில் எந்த புடுங்கியாலும் தடுக்க முடியாது. ஆனாலும் பானை சின்னம் என்ற ரிஸ்க் எடுத்தார்.
சிதம்பரம் தொகுதியில் பெரும்பான்மை வன்னியர் ஓட்டுகளை குறி வைத்து , பாமக ராமதாஸ் தொடர்ந்து திருமாவளவனை சீண்டிக்கொண்டே வந்தார். திருமாவை டெம்ப்ட் செய்வது தான் பாமகவின் வேலையாக இருந்தது. தர்மபுரியில் அன்புமணி வெற்றிக்காக வேலை செய்த அளவுக்கு இணையாக சிதம்பரத்தில் திருமாவின் தோல்விக்கு பாமக வேலை செய்தது.
இதையெல்லாம் மீறி சுயமரியாதையுடன் தலைவர் திருமாவளவன் பெற்ற இந்த வெற்றி மகத்தானது. பாமக வின் மூர்க்கத்தனமான தாக்குதலை திறம்பட கையாண்ட தொகுதி பொறுப்பாளர் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் அண்ணன் எஸ் எஸ் சிவசங்கர் அவர்களது களப்பணி மிகுந்த பாராட்டுக்குரியது.
திருமாவளவன் வெற்றியின் காரணமாக இது முழுமையான பெரியார் மண் என்று இன்று நம்மால் பெருமிதமாக சொல்லமுடிகிறது. அவருக்கு நமது வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை: