வெள்ளி, 24 மே, 2019

சட்டமன்றத்தில் அதிமுக பெரும்பான்மை... இடைத்தேர்தல் வெற்றி ..

இடைத்தேர்தல் வெற்றி: சட்டமன்றத்தில் அதிமுக பெரும்பான்மை!மின்னம்பலம் : தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது அதிமுக. 2 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலமாக, தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், நிலக்கோட்டை, தஞ்சாவூர், ஒசூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், திருவாரூர் ஆகிய 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. வழக்குகளைக் காரணம் தள்ளிவைக்கப்பட்ட நான்கு தொகுதிகளான திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 22 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரப்படி, அதிமுக 7 இடங்களிலும், திமுக 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக, திமுக தலா 2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
இதன் மூலமாக அதிமுக – 9, திமுக – 13 இடங்கள் என்ற நிலை தொடர்ந்து வருகிறது.

நேற்று மாலையில் ஆம்பூர் தொகுதியில் முதல்முதலாக வெற்றி அறிவிப்பு வெளியானது. ஆம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வில்வநாதன், அதிமுக வேட்பாளர் ஜோதி ராமலிங்க ராஜாவை விட 37,767 வாக்குகள் அதிகம் பெற்று வெற்று பெற்றுள்ளார். வில்வநாதன் – 96,455, ஜோதிராமலிங்க ராஜா-58,688.
குடியாத்தம் தொகுதியில் திமுக வேட்பாளர் காத்தவராயன், அதிமுக வேட்பாளர் மூர்த்தியை விட 27,841 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். காத்தவராயன் -1,06,137, மூர்த்தி – 78,296.
அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவின் செந்தில் பாலாஜி, அதிமுகவின் செந்தில்நாதனைவிட 37,957 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். செந்தில் பாலாஜி – 97,800, செந்தில்நாதன் – 59,843.
அரூர் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் பெற்ற வாக்குகள் – 88,632. திமுக வேட்பாளர் கிருஷ்ணகுமார் - 79,238,
ஒசூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சத்யா பெற்ற வாக்குகள் – 1,14,182. அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி – 91,603.
மானாமதுரை தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் நாகராஜன் 85,228 வாக்குகளையும், திமுக வேட்பாளர் காசிலிங்கம் என்ற இலக்கியதாசன் 77,034 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி வாகை சூடிய திமுக வேட்பாளர் சண்முகையா பெற்ற வாக்குகள் – 73,241. அதிமுக வேட்பாளர் மோகன் பெற்ற வாக்குகள் -53,584.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி 1,03,981 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். இவருக்கு அடுத்த இடத்தில் 85,488 வாக்குகளுடன் திமுக வேட்பாளர் மணி இரண்டாமிடம் பிடித்தார்.
பரமக்குடியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் 82,438 வாக்குகளையும், திமுக வேட்பாளர் சம்பத்குமார் 68,406 வாக்குகளையும் பெற்றனர்.
பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 1,06,394 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். இரண்டாமிடம் பிடித்த அதிமுக வேபாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் 38,371 வாக்குகள் பெற்றார்.
பூந்தமல்லி தொகுதியில் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 1,36,905 வாக்குகளுடன் முதலிடம் பிடித்தார். இரண்டாமிடம் பெற்ற அதிமுக வேட்பாளர் வைத்தியநாதன் பெற்ற வாக்குகள் 76,809.
சாத்தூர் தொகுதியில் அதிமுகவின் ராஜவர்மன், திமுக வேட்பாளர் ஸ்ரீனிவாசனை விட 1,101 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தார். அதிமுக – 76,820, திமுக – 75,719.
சோளிங்கர் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ஜி.சம்பத்து 1,03,545 வாக்குகளையும், திமுக வேட்பாளர் அசோகன் 87,489 வாக்குகளையும் பெற்றனர்.
திருப்போரூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் இதயவர்மன் பெற்ற வாக்குகள் – 1,02,491, அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் 82,235 வாக்குகள் பெற்றார்.
தஞ்சாவூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் பெற்ற வாக்குகள் 88,972. அதிமுக வேட்பாளர் காந்தி பெற்ற வாக்குகள், 54,992.
திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணன், அதிமுக வேட்பாளர் முனியாண்டியைவிட 2,396 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். திமுக -85,434, அதிமுக -83,038.
திருவாரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் 1,17,616 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அதிமுக வேட்பாளர் ஜீவானந்தம் 53,045 வாக்குகள் பெற்றார்.
விளாத்திகுளத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சின்னப்பன் 70,139 வாக்குகளையும், திமுகவின் ஜெயகுமார் 41,585 வாக்குகளையும் பெற்றனர்.
முன்னிலை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர் மகாராஜன் அதிமுக வேட்பாளர் லோகிராஜனைவிட 12,323 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
பெரியகுளம் தொகுதியில் திமுகவின் சரவணக்குமார், அதிமுக வேட்பாளர் மயில்வேலை விட 20,320 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
சூலூர் தொகுதியில் முன்னிலை வகித்துவரும் அதிமுக வேட்பாளர் கந்தசாமி, திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியைவிட 10,113 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
நிலக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் தேன்மொழி 90,982 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். இரண்டாமிடத்தில் உள்ள திமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியன் பெற்ற வாக்குகள் – 70,307.

கருத்துகள் இல்லை: