சனி, 11 மே, 2019

சின்மயி உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கொக்காய் மீது பாலியல் புகார் .

Raj Dev : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல்
புகாரை மறுபடியும் விசாரிக்க வலியுறுத்தி சின்மயி போராட்டம் நடத்த இருப்பதாக ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. தன்னுடைய மீடூ போன்ற ஒன்று இதில் இருப்பதை அவர் முகர்ந்திருக்கலாம். வைரமுத்து மீது குற்றஞ்சாட்டிய போது தெரிவித்தபடி எந்த சட்டப்பூர்வ நடவடிக்கையையும் தொடங்க அவர் இன்னும் முன்வரவில்லை. தனக்கான நீதியை பெறாமலே பாதிக்கப்பட்ட வேறொருவர் மீது அக்கறை கொள்வதை சிலர் வரவேற்கக்கூடும். சின்மயி புகாரின் தன்மையை இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமானின் சகோதரி ரஹைனா போட்டுடைத்தார். சின்மயி மிக மோசமான பொய்களை கூச்சமின்றி சொல்லக் கூடியவர் என்று அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் வைரமுத்து மீது எந்த நற்சான்றிதழையும் அவர் வழங்கவில்லை. வைரமுத்து மீது இந்த பிம்பம் திரைத்துறையில் ஏற்கனவே இருப்பதையும் கூறினார். அதை பயன்படுத்தி தன்னிடம் வைரமுத்து தவறாக நடந்து கொண்டதாக சின்மயி கூறி இருக்கலாம் என்பதை ரஹைனாவின்‌ அந்த பேட்டி சொல்லாமல் சொன்னது.

சின்மயி சில பேட்டிகளில் உளறியவை இந்த கோணத்திலான சந்தேகத்தை வலுப்படுத்துவதாக இருந்தது. வைரமுத்துவின் பிம்பத்தை தன்னால் சேதப்படுத்த இயலும் என்று நம்பி துணிந்து இறங்கிய‌ செயல் அது. சரி, தலைமை நீதிபதி விவகாரத்துக்கு வருவோம்.
ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் மிகவும் பலகீனமானது என்றே உச்சநீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே போன்றவர்கள் கருதுகிறார்கள். அவர் விடுதலை செய்யப்பட்டது அவர்களை ஆச்சரியப்படுத்தவில்லை. பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான வேறு முக்கியப் பிரச்சினைகள் மீது கவனத்தை ஈர்க்கின்றனர். அப்பெண் திட்டமிட்ட ரீதியில் தொடர்ச்சியாக பழி வழங்கப்பட்டுள்ளார். வேறு துறைக்கு முதலில் மாற்றப்பட்டது, 'பணித்திறன்‌ குறைபாடு' காரணமாக மெமோ வழங்கப்பட்டது, பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, அதன் பிறகு வேலையிலிருந்தே டிஸ்மிஸ் செய்யப்பட்டது, அவர் கணவரும் வேலையில் இருந்து நீக்கப்பட்டது, கணவரின் தம்பி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஆண் காவலர் ஒருவரின் இரவு விசாரணைக்கு அப்பெண் ஆளானது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மனைவியின் காலில் விழ வைத்தது, பிறகு உச்சநீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணம் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டது ஆகியவை பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் என்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட பெண் எந்த தவறு இழைத்திருந்தாலும் அவர் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் அதிகப்படியானவை. எனவே இந்த வழக்கில் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாகவும், அக்கறை கொள்ளக்கூடிய விசயமாகவும் மேற்கூறியவை இருக்கின்றன. அது எளிய மனிதரின் சிறு தவறுக்கு கிடைக்கும் அதிகப்பட்சமான தண்டனை சார்ந்த ஒரு பிரச்சினை. இருபத்தைந்தாயிரம் ரூபாய் கடனுக்கு விவசாயியின் வீட்டை ஜப்தி செய்யும் வங்கி அதிகாரிகள் மல்லையா, நீரவ் மோடிகளை தப்ப விடுவது போன்ற வாழ்க்கை தராதரம் சார்ந்து சட்டம் நடந்து கொள்ளும் முறைமை சார்ந்த ஒரு தீவிரமான பிரச்சினை. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கான ஆதரவு என்பது குற்றம் நிரூபிக்கப்படாத பாலியல் புகார் மீதல்லாமல் வேறு வகையில் அவர் துன்பப்படுத்தப்பட்டதை எதிர்கொள்ள துணை நிற்பதில் இருக்க வேண்டும். அதற்கான கவன ஈர்ப்புப் போராட்டங்கள் அவசியம் எனலாம். ஆனால் அதை விடுத்து வெற்று பரபரப்புக்காகவும், பிஜெபி அஜெண்டாவை நிறைவற்றும் விருப்பத்திலும் சின்மயி போன்றோர் தலையிடுவது துயரம். எப்படி மீடூவுக்கு இருந்த கவனத்தையும், ஆதரவையும் இவர் மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் சிதைத்தார்களோ அதே போன்று பாதிக்கப்பட்ட பெண் மீது உள்ளபடியாக எந்த அக்கறையுமின்றி ஒரு போலித்தனத்தை போராட்டம் என்று அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: