திங்கள், 6 மே, 2019

ஒடிசாவுக்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி: பிரதமர்

தினமலர்: புவனேஸ்வர் : போனி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா
மாநிலத்திற்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார் போனி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று (மே 06) ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒடிசா கவர்னர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் உடன் சென்றனர். பின்னர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி, முதல்வர் நவீன் பட்நாயக் ஆலோசனை நடத்தினர். ஆய்விற்கு பிறகு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ஒடிசா அரசு மற்றும் மத்திய அரசு இடையேயான தகவல் தொடர்பு மிக நன்றாக உள்ளது. நானும்
அனைத்தையும் கண்காணித்தேன். அரசின் ஒவ்வொரு அறிவுறுத்தலை ஏற்று, மக்கள் செயல்பட்டது பாராட்டதக்கது. மத்திய அரசு ஒடிசாவிற்கு ஏற்கனவே ரூ.381 கோடி ஒதுக்கி உள்ளது. தற்போது மேலும் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட உள்ளது என்றார்

கருத்துகள் இல்லை: