புதன், 8 மே, 2019

தந்தையைக் கொலை செய்த மகள் : திடுக்கிடும் சம்பவம் .. கோவில்பட்டி

வெப்துனியா ; கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின் புத்தூர்  விபி சிந்தன் பகுதியில் வசித்து வந்தவர் சுப்பையா(66). அங்குள்ள ஒரு தனியார்  மில்லில் வேலை செய்து ஓய்வுபெற்றவர் இவர் அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துவந்தார். இந்நிலையில் சுப்பையா கடந்த 3 ஆம்தேதி அதிகாலை உடல் வெந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முன்தினம் இறந்தார்.இதனையடுத்து சுப்பையாவை பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்ததாக அவரது மூத்தமகள் மூக்கம்மாளை நாலாட்டின் புத்தூர் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸாரிடம் மூக்கம்மாள் கூறியதாவது: காந்திராஜன் என்பவருக்கும் எனக்கும் கடந்த 1997 ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. ஒரு மகன் ஒருமகள் பிறந்தனர். மல்லிப்பட்டிணத்தில் தொழில் சரியாக இல்லாததால் 4 ஆண்டுகள் கழித்து  திருச்சியில் உள்ள பர்மா பஜாருக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தோம்.
பின்னர் கணவர் அடிக்கடி குடித்து வந்ததால்  எனக்கும் அவருக்கும் சண்டை வலுத்தது.போலீஸில் நான் புகார் செய்தேன். இதனையடுத்து இருவரையும் அழைத்து சமாதானம் பேசி சேர்ந்து வாழும்படி அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு நான் ஏற்றுக்கொள்ளவில்லை.ஸ்ரீரங்கம் கோர்டில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தேன்.


இந்நிலையில் வழக்கை விசாரணைக்கு கணவர் ஆஜராகாததால்  நீதிமன்றம் எனக்கு சாதகமாகத்தீர்ப்பளித்தது.

இதனையடுத்து மூத்த மகனை இன்ஜினியரிங் சேர்ந்து படிக்க வைக்க நினைத்தேன். அதனால் ஊருக்கு வந்தேன்.வீட்டில் கஷ்டம் நிலவியதால் நான் ஊரில் உள்ள மில்லில் வேலைக்குச் சேர்ந்து கூலி பெற்று குடும்பம் நடத்தி வந்தேன்.ஆனால் வருமானம் போதவில்லை. அதனால் தந்தை சுப்பையாவிடம் பணம் கேட்டேன். அவர் தரமறுத்தார். இதனையடுத்து வெளிநாட்டில் இருக்கும் எனது சகோதரர்களிடம்கேட்டேன். அதையும் அவர் தடுத்து நிறுத்திவிட்டார்.;

அதனால் எனக்கு கோபம் வந்தது அதனால் அப்பா இருந்த வீட்டுகுள் ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி  வீட்டுக்கு தீவைத்து விட்டு ஓடிவந்துவிட்டேன். அதன்பிறகு போலீஸார் நடத்திய விசாரணையில்  என்னை கைதுசெய்தனர். இவ்வாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து மூக்கம்மாளை கோவிலில் ஆஜர்படுத்தி நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறையில் அடைத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: