tamilthehindu :நீட் தேர்வை ரத்து செய்து விட்டால், தமிழகம் முன்னேறி விடுமா
என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், மக்கள் நீதி மய்யத்தின் மக்களவைத் தொகுதி வேட்பாளர் முனியசாமி மற்றும் சாத்தூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் சுந்தரராஜன் ஆகியோரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று (சனிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது:
"நீங்கள் (மக்கள்) இங்கு குழுமியிருப்பது மாற்றம் வேண்டும் என்பதற்காக. நான் என்ன காரணத்திற்காக வந்திருக்கிறேனோ, அதே காரணத்திற்காக வந்திருக்கிறீர்கள். நாம் இருவரும் ஒரே பக்கம், ஒரே கட்சி. உங்கள் கட்சி ஆட்சியாக மலர, நீங்கள் தான் ஆவண செய்ய வேண்டும்.
இன்றைக்கு அவர்கள் நாங்கள் தான் முதலில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தோம், அதனால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்கின்றனர். நல்ல ஐடியா. இதனை எங்கள் வீட்டுப் பெண் இறந்து போவதற்கு முன்பே செய்திருக்கலாமே. நீட் தேர்வு வேண்டாம் என அதனை எடுத்து விட்டால் தமிழகம் முன்னேறிடுமா? படிக்கிற பிள்ளைக்கு சோறு வேண்டாமா? குடிக்க தண்ணீர் வேண்டாமா? அதையெல்லாம் அவர்கள் ஏற்பாடு செய்ய மாட்டார்கள்.
இதற்கு முன்பு நீங்கள் செய்ததை என்ன செய்வது? உங்கள் மீதுள்ள வழக்குகள்? அவையெல்லாம் வழக்குகள் இல்லையா? காரணம் இல்லாமல் சிறையில் போட்டார்களா? நீதிமன்றம் தவறு செய்து விட்டதா? அப்புறம் ஏன் நீதிமன்றம் உங்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை.
அதனால், அவர்கள் திருப்பி வரும்போது நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இரு கழகங்களுமே மக்களை கொள்ளையடித்ததை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். அதற்கான சரியான தீர்ப்பை மக்கள் ஏப்.18 ஆம் தேதி கொடுக்கப் போகிறார்கள்".
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக