சந்தேகத்துக்கு இடமான முறையில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் மூலம் பெரிய பெட்டி ஒன்று கொண்டு செல்லப்படுவது தெரிந்ததே
தினத்தந்தி :புதுடில்லி: பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட
அதிகாரி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மோடியின் புகாரின் பேரில், விதிமுறைப்படி செயல்படாத அதிகாரியை சஸ்பெண்ட் செய்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
;லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று (ஏப்.,18 ) இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில், நாடு முழுவதும் பிரதமர் மோடி அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம்(ஏப்.,16) ஒடிசா சென்ற பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். பிரதமரின் சிறப்பு பாதுகாவலர்கள் தடுத்த நிலையிலும், இச்சோதனை நடைபெற்றது. இதனையடுத்து தேர்தல் கமிஷனில் பிரதமர் புகார் அளித்தார்.
விசாரணைக்கு பின், தேர்தல் கமிஷனின் விதிமுறைப்படி செயல்படாததால், சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி முகமது மொஹ்சினை, தேர்தல் கமிஷன் சஸ்பெண்ட் செய்து, நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு உள்ளவர்களுக்கு, சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமரின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தியதால் மொஹ்சின் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக