மின்னம்பலம் :
தமிழக
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான பி.எஸ்.கே நிறுவனத்துக்குச்
சொந்தமான இடங்களில் ஏப்ரல் 12. 13 தேதிகளில் நடத்தப்பட்ட வருமான வரிச்
சோதனையில் சுமார் 14 கோடி ரூபாய் அளவிலான ரொக்கப்பணமும், பல்வேறு
ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் பியூஷ் கோயலிடம் பேசி, ‘என்ன நமக்கு நெருக்கமானவங்க தரப்புலயே ரெய்டு நடக்குது?” என்று கேட்டதை நாம் முன்பே செய்தியாக வெளியிட்டிருக்கிறோம்.
இந்நிலையில் பியூஷ் கோயலிடம் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடிக்கு ஒரு எச்சரிக்கைத் தகவல் வந்திருப்பதாக பாஜக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதாவது தமிழக முதல்வர் எடப்பாடி மக்களவைத் தேர்தலில் காட்டும் அக்கறையையும் கவனத்தையும் விட 18 சட்டமன்ற இடைத் தேர்தல்களில்தான் அதிக கவனம் செலுத்துகிறார் என்று பியூஷ் கோயலுக்கு பாஜகவின் பல்வேறு வேட்பாளர்கள் சார்பில் இருந்தும் புகார் போயிருக்கிறது. இதுபற்றி முழுமையாக விசாரித்துக் கொண்ட பியூஷ் கோயல் ரெய்டு பற்றி தன்னிடம் பேச வந்த எடப்பாடியிடம்,
“என்ன… தமிழ்நாட்ல உங்க அரசாங்கம் தொடரணும்னு இருக்குற அக்கறை மத்தியில எங்க அரசாங்கம் தொடரணும்னு இல்ல போலருக்கே. எம்பி சீட் என்ன ஆனாலும் பரவாயில்லை, எம்.எல்.ஏ. சீட் தான் முக்கியம்னு நினைக்கிறீங்களா? நாளைக்கு மத்தியில ஆட்சி மாற்றம் ஏற்பட்டா உங்க நிலைமை என்ன ஆகும்னு யோசிச்சுப் பாருங்க. முழுமையா எம்பி தேர்தலிலும் கவனம் செலுத்துங்க” என்று சற்று கோபமாகவே பேசியிருக்கிறாராம் பியூஷ் கோயல்.
அதிமுக- பாஜக உறவில் இது ஒரு விரிசலாகவே பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக