தி.மு.க.
பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான குடோனில் ஏப்ரல்
01-ந்தேதி வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட
ரூ.11,48,51,800 பணம் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்தது என
தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியது வருமான வரித்துறை.
இந்த 11 கோடி ரூபாய் பற்றி டெல்லியில் ஆலோசித்த அதிகாரிகள், ""வேட்பாளரின் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டாலோ, வாக்காளர்களுக்கு பணம் தரும்போது பிடிபட்டாலோ, வேட்பாளர் கொடுத்ததாக கைப்பற்றப்பட்ட இடத்தின் உரிமையாளர் வாக்குமூலம் கொடுத்தாலோ மட்டுமே தேர்தலை ரத்து செய்யவோ, வேட்பாளரைத் தகுதிநீக்கம் செய்யவோ முடியும். இது அப்படியான அறிக்கை கிடையாது. வேட்புமனுத் தாக்கலின்போது தவறான தகவல் கொடுத்ததாக காவல்நிலையத்தில் புகார் கொடுங்கள்'' என பரிந்துரைத்துள்ளனர்.
அதன்படி, தேர்தல் செலவின மைய ஒருங்கிணைப்பாளர் சிலுப்பன் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் மீது கொடுத்த புகாரின் அடிப் படையில், காட்பாடி மாஜிஸ்திரேட்டின் அனுமதியோடு கதிர்ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காட்பாடி காவல்நிலையம்.
அந்த எஃப்.ஐ.ஆரில், கதிர்ஆனந்துக்குச் சொந்தமான இடங்களில் தணிக்கை செய்த அதிகாரிகள் தடுக்கப்பட்டுள்ளனர். அதற்குள் கண்காணிப்புக் கேமராக்களை அகற்றிவிட்டு அங்கிருந்த பணத்தை கட்சிப் பிரமுகர்களின் வீடுகளுக்கு மாற்றியிருக்கலாம். ஏப்.01-ந் தேதி பிடிபட்ட ரூ.11,48,51,800-ஐ வாக்காளர் களுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்ததாக பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் கூறியிருக் கிறார். இதன்மூலம் வேட்புமனுவில் கையிருப்புப் பணம் குறித்து தவறான தகவல் கொடுத்திருக்கிறார் என கதிர்ஆனந்த் மீது புகார் பதிவாகியுள்ளது.
அதேநேரத்தில், வேலூரைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர், ஏ.சி.எஸ்.-க்கு சொந்தமான பென்ஸ் பார்க் ஓட்டலின் ஏ.சி. அறைகளை தேர்தல் பணிக்காக பயன்படுத்துவது, அங்கிருந்தே பணம் தந்து அனுப்புவது, வேட்புமனுத் தாக்கலின் போது கலெக்டர் அலுவலக வாயிலில் வைத்தே பணப்பட்டுவாடா செய்தது என சிலவற்றைக் கண்காணித்து தேர்தல் அலுவலரும், ஆட்சியரு மான ராமனிடம் புகார் கொடுத்தார். அதனை வாபஸ் வாங்கச் சொல்லி புகழேந்தி என்பவர் மிரட்டி கையெழுத்து வாங்கியிருக்கிறார். இதுதொடர்பான புகார்களைத் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாதது, சாதிப்பாசத்தில் ஆட்சியர் ராமன் ஏ.சி.எஸ்.-க்கு எப்படியெல்லாம் உதவுகிறார் என்பதைக் குறிப்பிட்டு அந்தப் பத்திரிகையாளர் தலைமைத் தேர்தல் ஆணையத் துக்கு அனுப்பியுள்ள புகாரின் நகலை வாங்கி வைத்திருக்கிறது தி.மு.க.
தன் மீதான அனைத்துப் புகார்களையும் மறுக்கிறது ஏ.சி.எஸ். தரப்பு.
இதன்மூலம், இதுவரை ஏ.சி.எஸ். மீது நேரடி புகார் தராத தி.மு.க., அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. மோதலுக்கு ரெடியாகி விட்டார் துரைமுருகன் என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக