செவ்வாய், 16 ஏப்ரல், 2019

பாஜக எதிர்ப்பு அலையை ஒட்டு இயந்திரம் சீராக்குமாம் .. பாஜகவின் இறுதி நம்பிக்கை


     விகடன் : தேசம் முழுவதும் தனக்கு எதிரான மௌன அலை வீசுவதாக அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார்
பிரதமர் மோடி. இதற்காக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக திட்டமிடப்பட்ட அத்தனை ப்ளான்களையும் தடையின்றி அரங்கேற்ற வேண்டும் என்பதில் மோடியும் அமித்ஷாவும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மோடி போட்டிருக்கும் ஸ்கெட்ச் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகள் ""மத்திய உளவுத்துறையும் புலனாய்வு அமைப்புகளும் கொடுத்த ரிப்போர்ட்டின் படி பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் இடங்களின்
எண்ணிக்கை மிக மோசமாக இருக்கிறது. மோடியின் அறிவுஜீவிகளின் ரிப்போர்ட்டும் மேற்கண்ட முடிவுகளுடன் ஒத்துப்போகின்றன. அந்த ரிப்போர்ட்டுகள் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி உள்ளிட்ட தலைவர்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
< இது குறித்து மூத்த அமைச்சர்களுடனும், உயரதிகாரிகளுடனும் தினமும் பல ஆலோசனகளை நடத்தியபடி இருந்தார் மோடி. அதன்படி பல்வேறு ப்ளான்கள் போடப்பட்டன. குறிப்பாக, ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகளின் அரசியல் நடவடிக்கை களையும் அவர்களின் பண விநியோகத்தையும் முடக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதற்கு வருமானவரித்துறையையும், தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்திக்கொள்வது என தீர்மானித்தனர். அதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகளுக்கு ஸ்கெட்ச் போடப்பட்டு ரெய்டுகளை நடத்தி வருகின்றனர்.

தென் மாநிலங்களில் காங்கிரசுக்கு தேவையான தேர்தல் நிதிகளுக்கான பொறுப்பு மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பணம் பதுக்கப்பட்டிருக்கும் இடங்களையும், எந்தெந்த இடங்களிலிருந்து பணம் கைமாறி கடத்தப்படுகிறது என்பதையும், இவைகளுக்கான பொறுப்பு யாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறதென்பதையும் துல்லியமாக ஆராய்ந்து ரெய்டு நடத்தினர். இதற்கு தேர்தல் பார்வையாளர்களையும் உதவிக்கு அழைத்துக்கொண்டது வருமானவரித்துறை.
f
இதே பாணியில்தான், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் என பல்வேறு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் குறிவைக்கப்பட்டன. தேர்தல் நடைமுறைகள் அமலில் இருக்கும் போது வருமான வரித்துறை சோதனை நடத்துவது சட்டவிரோதமானது என எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு தேர்தல் ஆணையம் செவி சாய்க்கவில்லை. ஆனால், அந்த குரல்கள் அதிகரித்ததால் வருமானவரித்துறையிடம் தற்போது மென்மையாக கேள்வி எழுப்பியிருக்கிறது ஆணையம். நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென சம்மனும் அனுப்பியிருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒரே நாளில் பல மாநிலங்களிலும், ஒரே மாநிலத்தில் பல இடங்களிலும் தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தனர். இத்தகைய அரசியல் நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக, தனியாரிடமிருக்கும் சிறப்பு விமானங்கள், தனி விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அத்தனையையும் பா.ஜ.க. தலைமை முன்கூட்டியே புக் பண்ணி முடக்கி விட்டது. இதனால் தனி விமானங்களைப் புக் பண்ண எதிர்க்கட்சிகள் படாதபாடுபட்டனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் ரொம்பவும் நொந்துபோனார்கள்.

அதேபோல, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் ஃபார்முலாவை இந்தமுறை தீவிரமாக கையிலெடுத்துள்ளது பா.ஜ.க. வட மாநிலங்களில் தண்ணீராகப் பாய்கிறது ஓட்டுக்கு பணம். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், ஆந்திரா, கர்நாடகா என 5 மாநிலங்களையும் தொழிலதிபர் அம்பானி எடுத்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு தொழி லதிபரான அதானியிடம், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார் ஆகிய 4 மாநிலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதே போல, பல தொழிலதிபர்களிடமும் மாநிலங்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன. தமிழக பண விநியோகத்தை மாநில அரசிடமே ஒப்படைத்திருக்கிறார் அமித்ஷா. மேலும், இதனையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை "மிகவும்' நம்புகிறது பா.ஜ.க. தலைமை. அதற்கேற்ப, தொழில்நுட்பங்களை பயன்படுத்தியுள்ளனர்.
d
பழைய வாக்குப்பதிவு முறையின் போது, வாக்குப் பெட்டிகள் தூக்கிச் செல்லப்பட்டு மாற்றப்படும். தற்போது அது சாத்தியமில்லாத நிலையில், வீக்கான ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப்பதிவுக்குப் பின் மாற்று மெஷின்களாக 20 மின்னணு இயந் திரங்கள்வரை பயன்படுத்தி, அதில் பெருமளவில் பா.ஜ.க. ஆதரவு வாக்குகள் இருக்கும்படி செய்து, தோதான அதிகாரிகள் துணையுடன் அதனை ஓட்டுப்பதிவு கணக்கில் சேர்த்துவிட்டு, ஒரிஜினல் வாக்குப்பதிவு மெஷினை நீக்கிவிடவும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது என்கின்றன எதிர்க்கட்சிகள். பா.ஜ.க.வின் ஓட்டு மெஷின் மோசடி குறித்து இந்தியா முழுவதுமுள்ள எதிர்க் கட்சித் தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் ஆந்திர முதல் வர் சந்திரபாபு நாயுடு. யய டஆப எனும் யாருக்கு வாக்களித்தோம் என உறுதிப்படுத்தும் டேட்டா பதிவை 50% அளவுக்கு எண்ணச் செய்து, மெஷின் வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என எதிர்க் கட்சிகள் சுப்ரீம் கோர்ட் டில் முறையிட்டும், தொகுதிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் யய டஆப பதிவை ஒப்பிட்டு எண்ணலாம் என உத்தரவிட்டுள்ளது சுப்ரீம்கோர்ட். இப்படி பல ருத்ரதாண்டவங்களை ஆடி வருகிறார் மோடி'' எனச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

மோடி-அமித்ஷாவின் ருத்ரதாண்டவங்கள் மேற்கு வங்கத்தில் மட்டும் நுழைய முடியவில்லை. முதல்வர் மம்தா பானர்ஜியின் கோட்டையை உடைக்க முடியாமல் பா.ஜ.க. திணறுவதால், கடைசிக் கட்டத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரத்தை வைத்து மத பிரச் சினைகளை உருவாக்கவும் திட்ட மிடப்பட்டிருக்கிறதாம். இதனால் மேற்கு வங்கம் முழுவதும் பதற்றம் ஆக்ர மித்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் ராமநாதபுரம் போன்ற முஸ்லிம் செல்வாக்குள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு சமயத்தில் கலவரம் நடக்கலாம் என்ற அச்சம் உள்ளது.

இதற்கிடையே, பாஜகவின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளிக்க மோடி மறுத்துள்ள விவகாரம் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை டென்சன் படுத்தியிருக்கிறது. இது குறித்து ஆர்.எஸ். எஸ். தலைமை கேள்வி எழுப்பியபோது சில விளக்கங்களை அவர்கள் தெரிவிக்க, அதனை ஏற்க மறுத்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி யிருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்.

இந்த நிலையில், இருவரின் அதிகாரம் கட்டுக்கடங்காமல் இருப் பதைச் சுட்டிக்காட்டி பா.ஜ.க.விலிருந்து ராஜினாமா செய்துள்ளார் முரளி மனோகர் ஜோஷி. இந்த விவகாரம் தற்போது மோடி, அமித்ஷாவுக்கு எதிராக புயலை கிளப்பி வருகிறது. மேலும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார் ஜோஷி. ஏற்கனவே பா.ஜ.க.வில் மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா காங்கிரசில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மெஜாரிட்டிக்கான 273 இடங்களை பா.ஜ.க. கைப் பற்றுவது சந்தேகம்தான் என்பதால், குறைந்தபட்சம் 250 இடங்களையாவது ஜெயிக்காமல் போனால் தனக்கு எதிரான அத்தனை அரசியலும் பா.ஜ.க.வுக் குள்ளேயே நடக்கும் என உணர்ந்துள்ள மோடி, 300 இடங்களை குறி வைத்து காய்களை நகர்த்தியபடி இருக்கிறார். "இதற்காக, எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்; தேவை வெற்றியும் பிரதமர் பதவியை தக்க வைப்பதும் தான்' என உயரதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மோடியின் ருத்ர தாண்டவத்திற்கு ஈடாக தேர்தலோடு தொடர்புடைய அனைத்துத் துறைகளும் ஆடிக் கொண் டிருக்கின்றன.

-இரா.இளையசெல்வன்

கருத்துகள் இல்லை: