திங்கள், 4 பிப்ரவரி, 2019

மம்தாவுக்கு எதிரான நடவடிக்கை ஹிந்தி ‘வேத தர்மசாஸ்திர மநுநீதி போர்தான்

Subaguna Rajan : ஊழல் விசாரணை என்ற பெயரில் எதிர் தரப்பை ஒழித்து
விடுவதற்கான ஒன்றிய ஆட்சியாளர் ஏவிய அஸ்திரம் சிபிஐ. மம்தா போராட்டம் கூட்டாட்சி,மாநில சுயாட்சி தொடர்பிலான புதிய எழுச்சி ....
வங்காளமும் , ஆந்திரமும் ஏற்கனவே ஒன்றிய அரசின் அத்துமீறல் கருவியான சிபிஐ-யின் கட்டற்ற , முன் அனுமதியற்ற நுழைவை மீள கொணர்ந்து விட்டன.
தமிழ்நாட்டில் திமுக-வே பலவேளைகளில் சிபிஐ விசாரணை கோரும் விபரீதம் நடக்கவே செய்கிறது. இந்த கோரிக்கை எதிர் தரப்பின் அத்து மீறல்களால் உந்தப்படுகிறது என்றாலும், அது மாநில அரசின் சட்டம் ஒழுங்கு உரிமைக்கு எதிரானது என்பதை உணர வேண்டும்.
மன்னராட்சி காலத்தின் அந்நிய நாட்டு ஆட்சியாளரின் உதவியோடு தன் நாட்டின் அரியணை ஏறுவதற்கு ஒப்பானது.அந்த அரியணைகள் அந்நியரின் கைகளுக்கு மாறியது தான் பின்னர் நிகழ்ந்த வரலாறு....
சிபிஐ-யின் சமீபத்திய குழப்பங்களையெல்லாம் கண்ட பின்னும் சிபிஐ விசாரணை கோருவது அறிவீனம். சிபிஐ யின் வெற்றிகரமான வழக்கு விசாரணை மற்றும் தண்டனை பெற்றுத் தந்த சதவீதம் 10% கூட இல்லை என்பதை அறியுங்கள்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் ‘லோக்பால்’ அமைத்தே தீருவேன் என சவடால் பேசி ஆட்சிக்கு வந்த மோடி அரசு அதற்கான ஒரு சிறு நகர்வையும் நடத்தவில்லை என்பது ஒன்று போதாதா இவர்கள் ஊழல் ஒழிப்பு அக்கறையை புரிந்து கொள்ள....
இப்போது துவங்கி இருப்பது மாநில உரிமைகள் தொடர்பான போர் என்பதை மறைக்க,கொச்சைப்படுத்த ‘மம்தா நாடகம்’ என்போர்...
தேசியவாத ‘வேத தர்மசாஸ்திர மநுநீதி’ தாசர்களே.

#We_support_Mamta
#We_support_RegionalAutonomy
#We_seek_Federal_Indian_Union

கருத்துகள் இல்லை: