மின்னம்பலம் : “ஸ்டிராங்கான
கூட்டணி தமிழ்நாட்டில் அமைத்தே தீர வேண்டும் என்பதில் பாஜக ரொம்பவும்
தீவிரமாக இருக்கிறது. இதற்காக ஸ்பெஷல் டீம் ஒன்றை அமைத்திருக்கிறது பாஜக
தலைமை. இந்த டீமில் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங்,
பியூஷ்.கோயல் ஆகிய நான்கு பேர் இருக்கிறார்கள். இவர்கள்தான் தமிழ்நாடு
கூட்டணி தொடர்பான விஷயங்களை டீல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த டீம் கையில் எடுத்திருக்கும் விஷயம் இதுதான். ‘பிரிந்து நிற்கும் அதிமுகவை நாம் முதலில் ஒன்று சேர்த்தாக வேண்டும். கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை கவுண்டர் சமுதாயத்து ஓட்டுகள் எல்லாம் எடப்பாடி கையில் இருக்கிறது. முக்குலத்தோர் வாக்குகள் தினகரன் பக்கம் இருக்கிறது. வன்னியர் சமுதாயத்து வாக்குகள் பாமகவிடம் இருக்கிறது. அதிமுக கூட்டணிக்கு பாமக வருவது என்பது கிட்டதட்ட உறுதியாகி இருக்கிறது. எடப்பாடியும், தினகரனும் ஒன்று சேர்ந்து நம் பக்கம் வந்தால் கவுண்டர்கள், முக்குலத்தோர், வன்னியர் என தமிழகத்தில் பிரதானமாக இருக்கும் மூன்று சமுதாயத்தின் வாக்குகள் நமக்கு வந்து விடும். இது இல்லாமல் அதிமுகவுக்கென இருக்கும் வாங்கு வங்கி அப்படியே நமக்கு கிடைக்கும். தேமுதிகவையும் நாம் இழுத்துவிட்டால் போதும். அத்துடன் பாஜக வாக்குகளும் சேர்ந்தால், தமிழ்நாட்டில் குறைந்தது நாம் 25 தொகுதிகள் ஜெயிக்க முடியும். நாம் நினைக்கும் இந்த கூட்டணி தமிழ்நாட்டில் அமைந்தே ஆக வேண்டும்” என்று அந்த டீமில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த விவாதத்துக்குப் பிறகு, டீமில் உள்ள ஒவ்வொருவரும் நேரடியாகப் பேசாமல், தங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் மூலமாக ஒருபக்கம் எடப்பாடிக்கும், இன்னொரு பக்கம் தினகரனுக்கும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அன்புமணிக்கும் கூட சில தொழிலதிபர்கள் பேசியிருக்கிறார்கள். செலவுகளை எல்லாம் நாங்க பார்த்துக்குறோம் என்றெல்லாம் தொழிலதிபர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
10-ம் தேதி தினகரன் அணியில் இருக்கும் பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகத் தேதி கொடுத்திருந்தார் தினகரன். ஆனால் பாஜக தரப்பில் கொடுத்த தொடர் அழுத்தம், அது தொடர்பான பேச்சுவார்த்தை என தினகரன் திடீரென பிஸியாகிவிட்டார். அதனால் இன்றில் இருந்து அடுத்த ஒரு வாரத்துக்கு அனைத்து நிகழ்ச்சிகளையும் கேன்சல் செய்துவிட்டார். உடல்நிலை சரியில்லை, தொண்டை வலி என்று சொல்லி காரணம் சொல்லி இருக்கிறார் தினகரன். சில நாட்களாகவே அவரது குரல் மாறிப் போய் பேசுவதற்கு சிரமப்பட்டதை பிரஸ்மீட்டுகளில் பார்த்தனர் கட்சிக்காரர்கள். அதனால் தினகரன் ஓய்வெடுக்கிறார் என்பதை அவர்கள் நம்புகிறார்கள்.
அதேநேரம், பிஜேபி தரப்பில் கொடுக்கப்படும் தொடர் அழுத்தம் காரணமாக முக்கிய நிர்வாகிகள் சிலரை அழைத்துப் பேசுவதோடு மட்டுமல்லாமல், அவர்களது ரகசிய ஆலோசனை கூட்டத்துக்கும் தினகரன் போவார் என்றும் சிலர் சொல்கிறார்கள். இணைப்பு, கூட்டணிக்கு தினகரன் சம்மதித்தால் சிறையில் இருக்கும் சசிகலாவை சட்ட ரீதியாகவே வெளியே கொண்டுவதற்கான ஏற்பாடுகளில் இறங்குவதாக பாஜக தரப்பில் இருந்து தினகரனிடம் மெகா பேரம் பேசப்படுகிறதாம். உடல் நலக் குறைவாக இருக்கும் சசிகலாவை வெளியே கொண்டுவர இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் தினகரனிடம் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்களாம். அதனால்தான் அத்தனை நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு தீவிர ஆலோசனையில் இருக்கிறார் தினகரன் என்கிறார்கள்.
இது ஒருபக்கம் இருக்க சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் இந்த தகவல்களை எல்லாம் கொண்டு சென்றிருக்கிறார்கள் பாஜக தரப்பில். தேவைப்பட்டால் தங்களுக்கு தோதான பொது நபர்கள் மூலம் சிறைக்கே சென்று சசிகலாவையும் சந்தித்து சம்மதிக்க வைக்கும் முயற்சியிலும் ஈடுபடத் தயாராகிறது பாஜக ” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
தொடர்ந்து அடுத்த மெசேஜ்ஜும் வந்தது. “பாஜக கூட்டணியில் எப்படியாவது ஒரு சீட் வாங்கிவிட வேண்டும் என டெல்லிக்குப் போயிருக்கிறார் சசிகலாவின் சகோதரர் திவாகரன். அடுத்த மாதம் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்தி தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைக் காட்டப் போவதாகவும் சொல்லி இருக்கிறார் திவாகரன். ஆனால் இன்னும் பாஜகவில் இருந்து கிரீன் சிக்னல் எதுவும் வரவில்லையாம்.” என்பதுதான் அந்த மெசேஜ். ஃபேஸ்புக் ஏதோ கேட்பதற்குள் ஆஃப்லைனில் போயிருந்தது வாட்ஸ் அப்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக