வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

2 ஜி வழக்கு: அவகாசம் கேட்ட மனுதாரர்கள் தலா 3 ஆயிரம் மரம் நட வேண்டும் டெல்லி ஐகோர்ட்டு அதிரடி

2 ஜி வழக்கு: அவகாசம் கேட்ட மனுதாரர்கள் தலா 3 ஆயிரம் மரம் நட வேண்டும் டெல்லி ஐகோர்ட்டு அதிரடி
வெப்துனியா : 2 ‘ஜி’ வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் கேட்டவர்கள் தலா 3 ஆயிரம் மரம் நட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது புதுடெல்லி:< மத்தியில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு, 2 ‘ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு.
இதில் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. ஒரு வழக்கும், சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் தொடுத்தன. அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தொடுத்த சட்ட விரோத பணபரிமாற்ற தடை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள், வினோத் கோயங்கா, ஆசிப் பல்வா, கரீம் மொரானி, பி.அமிர்தம், சரத்குமார் உள்ளிட்ட 19 பேரை விடுதலை செய்து டெல்லி தனிக்கோர்ட்டு 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி தீர்ப்பு அளித்தது.


இதே போன்று சி.பி.ஐ. தொடுத்த ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை அதே நாளில் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விடுதலை செய்தது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் தனிக்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி மேல்முறையீடு செய்தது.

அதைத் தொடர்ந்து மறுநாளில், ஊழல் வழக்கில் தனிக்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது.

அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி நஜ்மி வாஜிரி விசாரித்து வருகிறார்.

இதில் சுவான் டெலிகாம் நிறுவனத்தின் நிறுவனர் சாகித் பல்வா, குசேகான் பழம், காய்கறி நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால் மற்றும் டைனமிக் ரியால்டி நிறுவனம், டி.பி. ரியால்டி நிறுவனம், நிகார் கட்டுமான நிறுவனம் ஆகியோர் பதில் மனுதாக்கல் செய்யவில்லை.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்டனர். அப்போது அவர்களுக்கு மேலும் அவகாசம் வழங்கிய நீதிபதி நஜ்மி வாஜிரி, அவர்கள் ஒவ்வொருவரும் தெற்கு டெல்லி பகுதியில் தலா 3 ஆயிரம் மரம் நடுமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக சாகித் பல்வாவும், ராஜீவ் அகர்வாலும் நேரிலும், பிற 3 நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதிகளும் சம்மந்தப்பட்ட வன அதிகாரி முன் வரும் 15-ந்தேதி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டார்.

வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (மார்ச்) 26-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தா

கருத்துகள் இல்லை: