தினமலர்:ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் இன மக்கள் ரயில் தண்டவாளங்களைத் தகர்த்தும், ரயில்களை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் இன மக்கள் இன்றும் (பிப்.,09) தங்களின் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். தண்டவாளங்களில் அமர்ந்து நகர மறுத்ததால் டில்லி, மும்பை, ஜெய்ப்பூர் செல்லும் ரயில்கள் பல மணி நேரம் தாமதமாகின. ஒரு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 7 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. சில ரயில்களின் தூரம் குறைக்கப்பட்டுள்ளது.
சனி, 9 பிப்ரவரி, 2019
இடஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் இனத்தவர் போராட்டம்.. ராஜஸ்தான்
தினமலர்:ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் இன மக்கள் ரயில் தண்டவாளங்களைத் தகர்த்தும், ரயில்களை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் இன மக்கள் இன்றும் (பிப்.,09) தங்களின் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். தண்டவாளங்களில் அமர்ந்து நகர மறுத்ததால் டில்லி, மும்பை, ஜெய்ப்பூர் செல்லும் ரயில்கள் பல மணி நேரம் தாமதமாகின. ஒரு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 7 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. சில ரயில்களின் தூரம் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக