புதன், 6 பிப்ரவரி, 2019

தமிழக மக்களின் மனநிலை.. விகடன் கருத்துகணிப்பு

விகடன் : பா ஜ க வுடன் அ தி மு க கூட்டணி அமைத்து போட்டியிட்டால்
நாங்கள் நிச்சயமாக நாங்கள் அ தி மு க விற்கு வாக்களிக்க மாட்டோம் என்பதே தமிழ் நாட்டில் பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது...
அதி மு க தனித்து போட்டியிட்டால் வாக்களிப்பீர்களா ?..என்ற கேள்விக்கு நிச்சயமாக நாங்கள் அ தி மு க விற்கும் வாக்களிக்க மாட்டோம். ஏனெனில் வெற்றி பெற்று பின்னர் மீண்டும் அவர்கள் பா ஜ க விற்குதான் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களின் கருத்தை தெரிவித்ததாக விகடன் கருத்துகணிப்பு சொல்கிறது . ..
மிகையில்லை

அதிமுகவிற்கு வாக்களிப்பதென்பது இன்றைய சூழலில் அது பாஜகவிற்கு மட்டுமே பலன்தரும் தமிழகத்தின் பாஜக செல்வாக்கென்பது ஏறக்குறைய பூஜ்யம் நிலையில்தான் இருக்கிறது ஆனால் அதை தூக்கிபிடிக்க வேண்டிய நெருக்கடியில் அதிமுக இருப்பதுதான் கொடுமை வேறு வழியில்லை .. அவர்கள் மீது இருக்கும் வழக்குகள் கொள்ளையடித்ததின் தெளிவுகள் வெளிப்படையாகவே ஊழல் இவையாவும் அவர்களை கைகட்டி சேவகம் செய்ய வைக்கிறது .. பாஜக தன்மையாகவெல்லாம் இல்லை மிரட்டுகிற தொனியில் தான் செயல்பாடுகள் இருக்கின்றன எந்த தொகுதி என்பதை கூட அவர்களே தீர்மானிக்க நிலை .. பாமகவை விட வாக்குவங்கி குறைவாக இருந்தபோதும் அதிக இடங்களை கேட்கிற துணிவு எங்கிருந்து வந்தது நேட்டாவை கூட தாண்ட முடியாத கட்சி பிரதான ஆளும்கட்சியிடம் எண்ணிக்கை அதிகமாக கேட்கிறதென்றால் காரணம் இவர்களின் குடுமி அவர்கள் கையில் வேறுவழியின்றி தலையாட்டுகிற கேடுகெட்டநிலை .. பேராசையில் பதவி மோகத்தில் கிடைத்த வாய்ப்பை வைத்து முடிந்தளவு சுருட்டிக்கொண்டு போய்விடவேண்டுமென்ற தவிப்பில் செய்த தில்லுமுல்லுகள் இப்போது நிற்க வக்கில்லாதவனை தோளில் சுமக்கவேண்டிய நிலை அதனால் தான் மக்கள் மிக தெளிவாக அதிமுகவிற்கு வாக்களித்தாலும் தேர்தலுக்கு பிறகு அவர்கள் பாஜகவோடு கூட்டணி வைப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் ..
..
அதிமுகவின் நிலை பரிதாபகரமாக இருப்பதையே இப்போதைய நிகழ்வுகள் காட்டுகிறது .. கொள்கைப்பிடிப்போ அரசியல் தெளிவோ இல்லாமல் கருணாநிதியை எதிர்க்கவேண்டுமென்ற ஒற்றை நோக்கத்திற்காக அதையே பலமாக எண்ணி தொடங்கபட்ட கட்சி எம்ஜிஆர் எனும் கவர்ச்சியும் அறுபது எழுபதுகளில் சினிமா மீதான மோகமும் நிழலை நிஜமென நம்பிய அறியாமையும் காலபோக்கில் ஏற்பட்ட தெளிவில் மெல்ல கரைய தொடங்கியது .. அதை பார்பனீய சக்திகள் தங்களின் நலனுக்காக கட்டிகாத்தார்கள் திமுக எதிர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுகவின் செயல்கள் பாதகம் தருமென்றும் அறிந்து ஊடகத்தின் துணையோடு அதிமுகவை காத்தார்கள் .. அதிமுக என்பதே பாசிசத்தின் மற்றொரு வடிவமாகதான் காத்துநின்றார்கள் இடையிடையே துளிர்விட நினைத்தபோது மக்கள் தந்த மரண அடி .. அவர்களை வளரவிடாமல் தடுத்துநின்றது .. ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிக்கி குற்றம் நிரூபிக்கபட்டபின் .. தொடர்ந்து சிறை விடுதலை மேல்முறையீடென ஜெயலலிதாவை காத்து கட்சியை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுக்க தீட்டிய திட்டம் இப்போது கைகொடுக்கிறது .. ஆனால் களம் வேறுமாதிரியான உண்மை உணர்த்தும் போது புரியும் ..இன்னும் எத்தனை காலமானாலும் பாசிச பார்பன சக்திகள் இங்கே வேரூன்ற முடியாது எத்தனை மாறுவேடம் தரித்தாலும் கண்டு சின்னபின்னமாக்கி சிதறி ஓடவிடுவார்கள் தமிழர்கள் ..
..
தமிழுக்கு தமிழர்க்கு தமிழ் மண்ணுக்கு தமிழனின் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் இந்த பாசிச பார்பனர்கள் .. தமிழனை அடிமைபடுத்திட நினைக்கிற இவர்கள் இயல்பை எப்போதும் விரட்டுவார்கள் .. பாஜக என்பதே பார்பனர் நலனுக்கான கட்சி அதை தூக்கிவைத்து கொண்டாட நினைத்தால் அதிமுக அழிய தொடங்கும் .. எப்போதுமே பாஜகவை ஏற்காத தமிழக மக்களின் மனநிலையை தான் விகடன் கருத்துகணிப்பு சொல்கிறது ..
அதிமுக தலையில் தொங்கும் தூக்குகயிறு பாஜக
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: