திங்கள், 4 பிப்ரவரி, 2019

இங்கே பார்பனசூழ்ச்சி பலிக்காது வேறு இடம் பாருங்க நிர்மலா சீதாராமன் !

ஆலஞ்சியார் : இத்தனை காலம் மத்தியில் கூட்டாச்சியில் இருந்த திராவிட
கட்சிகளால் என்ன பயனை தமிழகம் அடைந்தது .. நிர்மலா சீதாராமன்,..
அதுசரி .. மக்களோடு கலந்து மக்கள் தேர்தெடுத்து நாடாளுமன்ற உறுப்பினராகி மந்திரியாகியிருந்தால் தெரிந்திருக்கும் ..தமிழ் தெரிந்த பிராமணருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டுமென்பதற்காக.. மக்களால் தேர்வு செய்யபட்ட பொன்னருக்கு கூட தராமல் கேபினட் அந்தஸ்து கிடைத்தவருக்கு திமுக அமைச்சரவையில் இருந்தபோது தமிழகம் பெற்ற நலன்கள் என்னென்ன என்பதெல்லாம் தெரியாது ...
வி.பி.சிங் ஆட்சிகாலத்தில் பிராமணர்களின் கடும் எதிர்ப்பிற்கிடையே மண்டல்கமிஷன் பரிந்துரையை சட்டமாக்கி இன்றுவரை 27% விழுக்காடு பிற்படுத்தபட்டோர் இடஒதுக்கீடு கிடைக்கிறதே .. எரிச்சல் வரதான் செய்யும் .. தொலைதொடர்ப்பை எளிதாக்கி சாமானியன் கைகளிலும் தந்ததே .. பெரிய முதலாளிகளின் கொள்ளையை தடுத்து .. விளிப்பதற்கு ₹3.75 காசுகள் என்றிருந்ததை .50 காசுகள் என்றாக்கியதே அதனால் 2ஜி என்ற மாய எண்ணை வைத்து திமுகவை அழிக்க நினைத்து .. புடம்போட்ட தங்கமாய் திமுகவும் ராசாவும் மின்னுவது கண்டு எரிச்சல் வரதான் செய்யும் ..
இன்னுமிருக்கிறது


பொடா சட்டத்தை ரத்து செய்ய குரல் கொடுத்தது, சென்வாட் வரி ரத்து உறுதிமொழியை நிறைவேற்றியது, காவிரி நடுவர் மன்றம் அமைத்தது, காவிரி நதிநீர் தொடர்பான இடைக்காலத் தீர்ப்பைப் பெற்றது.
இடைக்காலத் தீர்ப்பின்படி காவிரி நதிநீர் ஆணையம் அமைத்தது..காவிரி இறுதித் தீர்ப்பைப் பெற்றது நீண்டகாலமாய் பல்வேறு அறிஞர்கள் வலியுறுத்தியும் பார்பனர்களால் தடுத்து நிறுத்திய தமிழை நீசமொழியென்று சொன்னவர்கள் வாயடைக்க எங்கள் தமிழை #செம்மொழி ஆக்கியது .. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைத்தது,
காமராஜர் எண்ணூர் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தது, 3 ஆயிரத்து 276 கி.மீ. நெடுஞ்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றி, மேம்பாலங்கள் அமைத்து, விரிவாக்கம் செய்தது, சேலம் ரோலிங் மில் சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தியது, தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் நிறுவியது, சேலத்திற்கென தனி ரயில்வே கோட்டம், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது, சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், சேதுசமுத்திர திட்டம், நெம்மேலியில் கடல் நீர் சுத்திகரிக்கும் திட்டம், சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களை இணைக்கும் சாலைகளை அகலப்படுத்தும் திட்டம், அனைத்து மீட்டர் கேஜ் ரெயில் பாதைகளையும் பிராட் கேஜ் பாதைகளாக மாற்ற ஒப்புதல் பெறப்பட்டது, 90 ரெயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டது, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம், ஒகனேக்கல் குடிநீர் திட்டம், தேசிய கடல்சார் பல்கலைக்கழகம், திருவாரூரில் தேசிய பல்கலைக்கழகம், திருச்சியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் அமைத்தது..
மத்திய அரசின் மூலம் ரூ.72 ஆயிரம் கோடி விவசாயக் கடன் மற்றும் வட்டி தள்ளுபடி, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு உறுதி போன்ற சாதனை திட்டங்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சிகாலத்தில் மத்திய அரசின் மூலமாக நிகழ்த்தப்பட்டுள்ளன...
..
ஆனால் வளர்ச்சி திட்டங்களை கண்டு பாசிச சக்திகள் கோபம் கொள்ளவில்லை .. மத்திய கல்வி வேலைவாய்ப்பில் 27% விழுக்காடு பிற்படுத்தபட்டோருக்கு வழங்கியது .. தீக்குளித்தெல்லாம் தடுக்க பார்த்தார்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள் .. திமுக ஆட்சிகிகு வந்தால் மத்திய அரசில் அங்கம் வகித்தால் தமிழர்கள் மேலும் மேலும் பலன்பெறுவார்களே.. இங்கே மதவாதத்தை சாதிவெறியை தூண்டி .. சூத்திரனை அடித்துக்கொள்ளவைத்து .. சத்தமில்லாமல் பார்பனர்களை உயர்பதவிகளுக்கும் பிற உயர்க்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அமர்த்திட முடியாமல் போகுமே என்ற அச்சம் தான் உளறவைத்திருக்கிறது ..பாஜக அரசால் தமிழர்கள் தமிழ்நாடு அடைந்த பயன் ஒன்றுமில்லை .. நோட்டோவை தாண்ட முடியாத நிலையில் அடிமைகள் வைத்து ஏதேனும் நன்மையடைந்திட முடியாத என்ற நப்பாசையில் உலா வருகிறார்கள் ..
பாவம் புதைத்த சுடவே தெரியாமல் அழிய நேரிடும்
திராவிடம் எப்போதும் ஆரியத்திற்கு பாசிசத்திற்கு பிராமணீயத்திற்கு எதிரானது .. இங்கே பார்பனசூழ்ச்சி பலிக்காது வேறு இடம் பார்க்கவும் .. நிர்மலா சீதாராமன் .. யாரென்றே தெரியாதவர்களெல்லாம் பாஜக ஆட்சியில் இருப்பதால் துள்ளுகிறார்கள்.. நாட்கள்
எண்ணபடுகின்றன விரட்டியடிக்கபட்டு.. புதியதொரு அத்தியாயம் குறிக்கபடும் மதவெறியை சாய்க்க தமிழகம் என்றும் முன் நிற்கும் ..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: