சபாஷ் ஶ்ரீ கணேஷ் அவர்களே. நீங்கள் இந்த நேர்காணலில் பதிவு செய்த யாவும் 100க்கு 100 வரலாற்று மெய். கஞ்சிரா மாமுண்டியா பிள்ளை, புதக்கோட்டை தஷிணாமூர்த்தி பிள்ளை ஆகியோர் பற்றிய தகவல்கள் சுவையானவை.
என்னுடைய அம்மா வழி தாத்தா இத்தகவல்களை பல நாட்கள் என்னோடு பகிர நான் அதை ஒரு டைரியில் எழுதியும் வைத்தேன்.
ஃபர்னான்து பற்றிய மற்றோரு சுவையான பதிவு, உங்கள் அனைவரது அனுமதியுடன். பாலக்காடு மணி ஐயர் ஒரு முறை இவரிடம் "நீ எனக்கு முட்டு செய்து தருவதை காட்டிலும் பழனிவாளுக்கு (சுப்பிரமணியம் பிள்ளை) இன்னம் நன்றாகவே அமைத்து தருவது போல் எனக்கு படுகிறது. அவர் வாசிப்பில் இருக்கும் சுநாதம் என் வாசிப்பில் கூட இல்லை. நீ அப்படி என்னதான் ப்ரத்யேகமாக செய்து தருகிறாயோ அறியேன்" என்றாறே பார்க்கலாம். மணி ஐயர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி ஃபர்னான்தும் சில மாற்றங்கள் செய்தும் மணி ஐயருக்கு திருப்தியில்லை. விளையாட்டாக மீண்டும் ஒரு தடவை தன் வழக்கை நினைவூட்டினார். இந்த முறை ஃபர்னான்து "ஐயர்வாள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லையெனில் ஒன்றைக்கூறுகிறேன்" என்று சொன்னதும் ஆர்வம் மேலிட மணி ஐயரும் அவரை வினவ, ஃபர்னான்து கூறியதாக அறியப்படுவது "அந்த சுநாதம் பழனி ஐயா கைவிரல் நயமேயன்றி வேறு விசேஷமில்லை". இதை கேட்ட மணி ஐயரும் சிரித்துக்கொண்டே அதை அங்கீகரித்தார் வினயத்துடன். இப்படிப்பட்ட இசை மேதைகளையும், ஜாம்பவான்களையும் பற்றிய சுவாரசியமான தகவல்களும் சரித்திரப்பதிவேடுகளும் இருக்க, அவைகளை வெளிக்கொணர்ந்து மக்கள் அனைவரிடமும் அறிமுகப்படுத்துதலே இசைவாணர் அனைவர்க்கும் தரும் உரிய மரியாதை. சரியான வாதமே, ஒப்புகிறோம் கணேஷ் சார்!.. தகவலுக்கு நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக