விகடன் -
சி.ய.ஆனந்தகுமார்- "என்.ஜி.மணிகண்டன:
திமுக;செயல்; தலைவர் மு.க.ஸ்டாலின்,; நேற்று மாலை திருச்சி முக்கொம்பில்; இருந்து காவிரி உரிமை மீட்பு பயணத்தைத்
துவங்கினார். அந்தப் பயணத்தில் கலந்து கொள்ளத் தமிழகம் முழுவதிலும் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர்கள்
ஆ.ராசா, டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தாமோ அன்பரசன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்
உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். அதனுடன் கூட்டணி கட்சித் தலைவர்களான
திருநாவுக்கரசு, தொல்.திருமாவளவன், முத்தரசன், காதர்மொய்தீன்,
ஜவாஹருல்லா, பாலகிருஷ்ணன் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதனால்
திருச்சி முக்கம்பில் இருந்து கல்லணை தோகூர் வரை 35
கி.மீட்டர் தூரம் பயணம் செய்த
ஸ்டாலின் முதல்நாள் பயணத்தை நிறைவு செய்தார்.
முக்கம்பில், பயணத்தின் துவக்க நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்டம்
மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை எனப் பல
மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வருகை அதிகமாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியால் சுமார் 4 கிலோமீட்டருக்கு கரூர்-திருச்சி
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. பல மணி நேரம் சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேருந்துகள் பாதை மாற்றி விடப்பட்டன.
ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை துவங்கியபோது, அங்கு இருந்த
தொட்டியம் ஒன்றிய திமுக செயலாளர் சீமானூர் பிரபு, ஸ்டாலின் வந்த காரைப் பின்தொடர்ந்து வந்துள்ளார். வழியில் ஜீயபுரத்தில் ஸ்டாலின் நடந்துசெல்லும்போது கையில் கொடியை ஏந்தியபடி ஸ்டாலினுடன் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது சீமானூர் பிரபுவுக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து அவர் கையில் வைத்திருந்த கொடியோடு, நெஞ்சுவலியால் துடித்தபடி, கீழே சரிய, அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை திருச்சி காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த 1986ம் ஆண்டு முதல் திமுகவில் இருக்கும் இவர், உறுப்பினராகச் சேர்ந்து, மாவட்ட பிரதிநிதி, ஒன்றிய செயலாளர், இரண்டு முறை ஒன்றிய கவுன்சிலர் என அடுத்தடுத்து வளர்ந்தவர். கடந்த 2016ம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட பல்வேறு நபர்கள் காய்நகர்த்தியபோதும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சிபாரிசில் திமுக தலைமை, சீமானூர் பிரபுவுக்கு வாய்ப்பு வழங்கியது. வெற்றி வாய்ப்பை இழந்தபிறகு அரசியலில் கொஞ்சம் அமைதியாக இருந்தவர், தற்போது மீண்டும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். காவிரி பிரச்னைக்காக தி.மு.க நடத்திய போராட்டங்கள், சாலைமறியலில் முன்னின்று நடத்தி வந்தார்.

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் சீமானூர் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாகக்
கூறியதை அடுத்து, அவரது உடல் திருச்சி
தொட்டியத்தை அடுத்துள்ள சீனிவாச நல்லூரில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு
செல்லப்பட்டது.
கடந்த 1986ம் ஆண்டு முதல் திமுகவில் இருக்கும் இவர், உறுப்பினராகச் சேர்ந்து, மாவட்ட பிரதிநிதி, ஒன்றிய செயலாளர், இரண்டு முறை ஒன்றிய கவுன்சிலர் என அடுத்தடுத்து வளர்ந்தவர். கடந்த 2016ம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட பல்வேறு நபர்கள் காய்நகர்த்தியபோதும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சிபாரிசில் திமுக தலைமை, சீமானூர் பிரபுவுக்கு வாய்ப்பு வழங்கியது. வெற்றி வாய்ப்பை இழந்தபிறகு அரசியலில் கொஞ்சம் அமைதியாக இருந்தவர், தற்போது மீண்டும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். காவிரி பிரச்னைக்காக தி.மு.க நடத்திய போராட்டங்கள், சாலைமறியலில் முன்னின்று நடத்தி வந்தார்.
அந்த வகையில் காவிரி உரிமையை மீட்கும் வகையில் நடந்த பயணத்தில்
சீமானூர் பிரபு உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
அவரின் இறுதி சடங்கில் ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக