Kalai Mathi- Oneindia Tamil:
திருச்சி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
காவிரி உரிமை மீட்பு நடை பயணத்தை திருச்சி முக்கொம்பில் இன்று
தொடங்கியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக அதன் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை திருச்சி முக்கொம்பில் இன்று தொடங்கியுள்ளார்.
இதனை முன்னிட்டு திருச்சி புறப்பட்ட ஸ்டாலின் தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்.
ஸ்டாலின் உரிமை மீட்பு நடைபயண நிகழ்ச்சியில் அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஸ்டாலினுடன் எதிர்க்கட்சி தலைவர்கள் நடை பயணம் செல்கின்றனர்.
6 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள் விவசாயிகளை சந்திக்கின்றனர். இந்த நடை பயணம் கடலூரில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடை பயணத்தை தொடங்கி வைப்பதற்கு முன்னதாக, ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் உரையாற்றினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக