ஞாயிறு, 10 டிசம்பர், 2017

குமரி மீனவர்கள் உயிரழப்புக்கள் ... மத்திய அமைச்சர் அதிகாரிகள் மீது வழக்கு போடவேண்டும்



Vincent Raj : இறந்து போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இது போன்ற நிவாரணம மக்களின் கொந்தளிப்பினை அடக்க முடியும் என்று ஆட்சியாளர்கள் தப்பு கணக்கு போடுகின்றனர்.இதுதான் தீர்வு என்றும் நம்புகின்றனர்.ஆனால் முன் எக்சரிக்கை செய்து மீனவர்களின் உயிர்களை காப்பாற்றி இருக்க வேண்டும்.புயலில் சிக்கிக்கொண்ட மீனவர்களை துரிதமாக மீட்டு இருக்க வேண்டும்.இதை எல்லாம் செய்ய தவறிய ஆட்சியாளர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.நீதி மன்றம் இது போன்ற சம்பவங்களில் தானாகவே முன் வந்து வழக்கினை எடுத்து கொண்டு விசாரணை செய்ய வேண்டும்.அது மட்டும் அல்ல டெல்லியில் உள்ள மத்திய அமைச்சகத்தில் இயற்கை சீற்றங்கள் பாதுகாப்பு பிரிவு இருக்கிறது.இயற்கை சீற்றங்கள் நடப்பதற்கு முன்பு, முன் எக்சரிக்கை செய்வது,அந்த பகுதியில் புனரமைப்பு பணியில் ஈடுபடுவது என்கிற இரண்டு முக்கிய பணிகளில் இந்த பிரிவு செயல்பட வேண்டும்.ஆகவே மத்திய அமைச்சக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீதும் வழக்கு போட வேண்டும்.அறம் படத்தில் இவர்களிடம் கயிற்றினை தவிர வேறு எதுவும் இல்லை என்று வசனம் வரும்.ஆனால் புயலில் சிக்கிக்கொண்ட மீனவர்களை மீட்க கயிறு கூட இல்லை என்பதுதான் உண்மை.தென் தமிழகம் இழவு வீடுகளாக இருக்கிறது.வட தமிழகம் தேர்தல் கொண்டாட்டத்தில் உள்ளது.உறுபடுவோம்.

கருத்துகள் இல்லை: