பத்திரிகையாளர்
கௌரி லங்கேஷின் கொலைக்குப் பின், 18 எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள்,
மற்றும் முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஆகியோருக்குப் பாதுகாப்பு வழங்கப்
புலனாய்வு துறை போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் (55), கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (செப்டம்பர், 5) பெங்களூருவில் உள்ள அவரது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, பீகாரில் இந்திப் பத்திரிக்கையாளரான பங்கஜ் மிஸ்ரா மீது இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, கிரிஷ் கர்னாடு, பரகூர் ராமசந்திரப்பா, பாட்டீல் புட்டப்பா, சென்னவீர கனவி உள்ளிட்ட 18 எழுத்தாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், லிங்காயத்து பிரிவை தனி மதமாக அறிவிக்க வலியுறுத்தும் எஸ்.எம்.ஜாம்தாருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஏனெனில், அவர்களுக்கு கவுரிலங்கேஷ்,கல்புர்கி கொலையாளிகளால் ஆபத்து வர வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளதை அடுத்து,பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தனிநபர்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை முழுமையாக ஆய்வு செய்தபிறகு, இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. குறைந்த ஆபத்து, உயர் ஆபத்து உள்ள நபர்கள் என வகைப்படுத்தப்பட்டுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என மூத்த புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக