வியாழன், 24 ஆகஸ்ட், 2017

பன்னீரின் கிணறு வழக்கு ஊத்தி மூடப்பட்டது .. இதுக்குதானே ஆசைப்பட்டாய் பன்னீர்

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான கிணறு. தேனி லெட்சுமிபுரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மனைவி விஜயலெட்சுமிக்கு சொந்தமான கிணறை ஆளுநர் பெயருக்கு பத்திர பதிவு செய்து கொடுத்து லட்சுமிபுரம் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிய ஆவணங்களை தாக்கல் செய்ததால் வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தேனி லெட்சுமிபுரத்தை சேர்ந்த ரெங்கசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தேனி அருகே லெட்சுமிபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராம மக்கள் 5000 ஏக்கர் விளை நிலத்தில் விவசாயம் செய்து வருகிறர்கள். மேலும் குடிநீர் தேவைக்காக இரண்டு கிணறுகள் வெட்டப்பட்டது.

அதில் ஒன்று பொதுமக்கள் பங்களிப்பில் வெட்டப்பட்டது. இந்நிலையில் லெட்சுமிபுரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மனைவி விஜயலெட்சுமிக்கு சொந்தமான நிலத்தில் கிணறு தோண்டப்பட்டது.
அப்பொழுது எங்கள் கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று போராடினர். அப்பொழுது குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டால் கிராம மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் என உறுதி கூறப்பட்டது. மேலும் அவர்கள் 15 HP, 20 HP திறன் கொண்ட போர்வெல்களை அமைத்தார்கள். இதிலிருந்து குழாய் மூலம் சுற்றி உள்ள பகுதிகளுக்கு, குறிப்பாக ஒரு வருவாய் கிராமத்திலிருந்து மற்றொரு வருவாய்க் கிராமத்திற்கு குழாய் மூலம் தண்ணீரைக் கொண்டு செல்கின்றனர்.
இது மின்வாரியத்தின் விதிகளுக்கு எதிரானது. இந்த நிலையில் புதிதாக 60-க்கு 60 அளவில் ஓபிஎஸ்-ன் மனைவிக்கு சொந்தமான நிலத்தில் தோண்டும் முயற்சி நடைபெறுகிறது.
இதை எதிர்த்து லட்சுமிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த இடத்தை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்து கிணறு தோண்டும் பணிக்கு தடை விதித்துள்ளார். மேலும் இந்த கிணறு தோண்டுவதன் மூலமாக லெட்சுமிபுரம் உள்ளிட்ட 5 கிராம மக்களின் விவசாய குடிநீர்த் தேவைகள் பாதிக்கப்படும்.
மேலும் மின்வாரிய விதிமுறைப்படி ஆற்றின் கரையோரம் 200 மீட்டருக்கு அப்பால் உள்ள விளை நிலங்களுக்குத்தான் விவசாய பயன்பாட்டிற்கான மின் இணைப்பு வழங்கப்படும் என உள்ளது. ஆனால் வரட்டாறின் கரையில் இருந்து 15 மீட்டர் தூரத்தில் உள்ள
விஜயலெட்சுமியின் நிலத்திற்கு விவசாய பயன்பாட்டிற்கான மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மின் இணைப்பைத் துண்டிக்க உத்தரவிட வேண்டும்" என கேட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சசிதரன் - சுவாமிநாதன் அமர்வு முன்பு இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர், கிணறு பகுதியை ஆளுநர் பெயருக்கு பத்திர பதிவு செய்து கொடுத்து, லட்சுமிபுரம் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிய ஆவணங்களைத் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

கருத்துகள் இல்லை: