செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

தினகரன் 25 எம்..எல்..ஏ.க்களுடேன் ஆளுநரை நாளை சந்திக்றார் !

mayura-akilan. Oneindia Tamil சென்னை: ஓபிஎஸ் உடன் இணைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி எங்களை கலந்து ஆலோசிக்கவில்லை என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கூறியுள்ளனர்.
அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இன்று இணைந்துள்ளன. இந்த இணைப்பு முடிந்த உடன் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். இது டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அணிகள் இணைப்பு குறித்து மாலை முதலே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் திடீரென்று ஜெயலலிதா சமாதிக்கு வந்து தியானம் மேற்கொண்டனர்.
அரைமணி நேர தியானத்திற்குப் பிறகு எம்எல்ஏக்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ் செல்வன் எம்எல்ஏ, சசிகலாவை பொதுச்செயலராக்கியது ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்தான்.
பொதுக்குழுவை கூட்டி தற்காலிக பொதுச்செயலராக சசிகலாவை தேர்வு செய்தனர். 3000 பொதுக்குழு உறுப்பினர்களும் சசிகலாவை ஏற்றுக் கொண்டோம்
சொந்தக்காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக கூறினார் ஒ.பன்னீர் செல்வம். ஓபிஎஸ், எடப்பாடி, தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் சசிகலாவை முதல்வராக தேர்வு செய்தனர்
சசிகலாவினால் அடையாளம் காட்டப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. அவருக்கு 122 பேர் ஆதரவாக வாக்களித்தோம். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களித்தவர் ஓ.பன்னீர் செல்வம்.
இரட்டை இலையை முடக்கியவர், அதிமுக அரசை ஊழல் அரசு என்று கூறியவர் ஓபிஎஸ் 10 எம்எல்ஏக்களை வைத்துள்ளார். அவர் ஆலோசனை நடத்திதான் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்தார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள் 3 பேர் எடப்பாடி பழனிச்சாமி பின்னால் சென்றோம். 9 எம்எல்ஏக்களுக்கு முக்கியத்துவம் தரும் நீங்கள் எங்களை கேட்கவிலையே.
இரட்டை இலையை முடக்கிய அதிமுகவை முடக்கிய ஓபிஎஸ்ஸை ஏற்க முடியாது. 10 எம்.எல்.ஏக்களை மட்டும் வைத்திருக்கும் ஓபிஎஸ்ஸை சேர்க்க வேண்டிய அவசியம் என்ன?.
ஓபிஎஸ்ஸை சேர்ப்பது குறித்து எங்களிடம் கேட்க வேண்டுமா? இல்லையா?. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம்தானே போனோம்.
25 எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் எங்களை ஏன் மதிக்கவில்லை. ஜெயலலிதா சமாதியில் கண்ணீர்விட்டு குறைகளை கூறியிருக்கிறோம்.
நாளை ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். 10 மணிக்கு ஆளுநரை சந்தித்து பேசுவோம். அதன்பிறகு எங்களின் நடவடிக்கைகள் ஒட்டு மொத்தமாக அறிவிப்போம்

கருத்துகள் இல்லை: