புதன், 23 ஆகஸ்ட், 2017

தமிழன் முதுகில் குத்திய நிர்மலா சீதாராமன் + பாஜக ! ..... இன்று போராடினால் நீங்கள் வெல்லலாம்!

Troll Trousers 2.0: NEET தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என மாணவர்கள் இங்கே போராடிக் கொண்டிருக்கும் போது., நம்மை மடை மாற்றி ஓராண்டு விலக்கு என பேச வைத்து விட்டு உச்ச நீதி மன்றத்தில் தமிழகத்திற்கு விலக்கு இல்லை என இந்திய அரசு சொல்வது பச்சையான துரோக செயல்!
OPS -EPS என இரு அயோக்கியர்களை நமக்கு பரிசளித்து விட்டு சென்றிருக்கிறார் ஜெயலலிதா!
தமிழன் தன் வாழ்வில் எதிரியை விட கூடவே இருக்கும் துரோகிகளை எப்படி வகைப்படுத்த அறிந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ளும் காலம் இது!

எந்த NEET, GST, உதய் மின் திட்டம் வேண்டாம் என்று ஜெ எதிர்த்தாரோ அதையே தான் தற்போது தற்போது இரு தமிழின துரோகிகளும் அதே அதிமுக வின் பெயரில் தாரை வார்த்துள்ளனர்!

இதில் நிர்மலா சீதாராமன் எவ்வளவு பெரிய துரோகத்தை ஒட்டு மொத்த நாட்டிற்கும் திட்டமிட்டு கட்டமைத்தார் என்பதை அறிய இரண்டு வருடம் பின்னோக்கி செல்வது முக்கியம்!
2015 டிச. 16-19 ல் கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடந்த WTO கூட்டத் தொடரில் உயர்க்கல்வியை Commercial Trade ல் கொண்டு வர இந்தியா கையொப்பம் இட்டது!

இதை குறித்து நம்மிடையே விழிப்புணர்வு அடையச் செய்தவர் கல்வியாளர்.பிரின்ஸ் கஜேந்திர பாபு (ஜூலை -2015 லேயே).
இதை தமிழ் வழிக் கூட்டியக்கம் சார்பில் மே பதினேழு இயக்கமும் இணைந்து எதிர்ப்பை பதிவு செய்தது!
தோழர்.பிரின்ஸ் தமிழகம் முழுதும் தமிழ் ஆர்வலர்களிடமும் மாணவர்களிடம் கையெழுத்து பெற்று மத்திய அரசிடம் எதிர்ப்பை காட்டினர்!
நிர்மலா கையெழுத்து போட்ட அந்த விதிமுறையில் இருந்த ஷரத்துக்களில் முக்கியமானது :-
* கல்லூரி படிப்பை சேவைத் துறையில் இருந்து வணிகத்துறைக்கு மாற்றுவது!
* மூன்றாம் உலக நாடுகள் அனைத்திற்கும் இது பொருந்தும் (120 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு)
* ஓர் வணிக அல்லது தொழிற்சாலைக்கு விதிக்கப்படும் அத்தனை பொருளாதார வரிகளும் உயர் கல்விக்கும் உண்டு!
* உலகின் மேல்தட்டு நாடுகளில் இருக்கும் மாணவர்கள் மூன்றாம் உலக நாடுகளின் அரசு கல்லூரிகளில் பயில அனுமதி ( தஞ்சை மெடிக்கல் காலேஜில் நியூயார்க் மாணவன் நம் வரிப் பணத்தில் படிப்பது)
இதை எதிர்த்து தென் ஆப்ரிக்கா நாடுகளிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் மாணவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்!
2015 டிசம்பரில் நாம் சென்னை மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த அதே சமயத்தில்
டெல்லி JNU மாணவர்கள் Occupy Parliament என்ற பெயரில் மாபெரும் பேரணியை டிச. 9- 10 ல் நடத்தினர்! காவல்துறை அதை தடியடி நடத்தி கலவரமாக மாற்றியது!
மாணவர்களுக்கு உண்மையை கூறியதற்காக பல மாதங்கள் கழித்து இதே கோபத்தை வைத்து புரோக்கர் மோடியின் அரசு கன்னையா குமாரை தேச துரோகியாக ஆக்கி சிறையில் அடைத்தது!
மே பதினேழு இயக்கம் பல நாட்களாக சொல்லி வருவது தான்! நமது உரிமையை காக்க நாம் தான் போராட வேண்டும்!
இனி எதிர்த்து நின்றால் தான் நாம் உயிர் பிழைக்கவே முடியும் எனும் நிலை ஓர் நாள் வந்தே தீரும்!
இது பல ஆண்டுகளாக வரலாறு நமக்கு நடத்தியுள்ள பாடம்!
இங்கே போராடினால் நீங்கள் வெல்லலாம்!

கருத்துகள் இல்லை: