ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

நீட் தேர்வு .... தமிழ் பாடத்திட்டம் இனி உல்லூலாயி உல்லுலாயி....

trollmafia2: நீட் தேர்வால் பறிபோகப் போவது வெறும் MBBS இடங்கள் மட்டுமல்ல. மறைமுகமாக மக்கள் CBSE பாடத்திட்டத்திற்கு தள்ளப் படுவார்கள். State board விட்டு விலகும்போதே நம் மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டத்திலிருந்து வீரபாண்டிய கட்டப் பொம்மனும், தீரன் சின்னமலையும், மீசையை முறுக்கிய பாரதியும் ஓரம் கட்டப் படுவார்கள்.
மதுரையும், தஞ்சாவூரும் அரசியல் நகரங்கள் என்பதோ அவர்கள் வென்ற வெற்றிகளோ மறைக்கப் படும். பாடலி புத்திரமும், ராஜ புத்திரர்கள் கதைகளும் சொல்லப் படும், வேலூர் புரட்சி, சிப்பாய் கலகமாக சொல்லிக் கொடுக்கப் படும். திருக்குறள் ஆங்கில் ப்ரோவெர்ப் வடிவத்தில் சொல்லப் பட்டு அந்நியமாக்கப் படும்.
பொங்கல் பண்டிகை வெறும் ஜல்லிக்கட்டாக மாற்றப் பட்டு பீட்டாவோடு சண்டைபோடும் விழாவாக மாற்றப் படும். ஏற்கனவே கேரளாவில் திருவோணம் பண்டிகையை வாமன ஜெயந்தியாக்கி அங்கே வாங்கிக் கட்டிக் கொண்டதைப் போல பல நிகழ்வுகள் சிறுவயதில் இருந்தே திணிக்கப் படும். ஆனால் சிறுவயதிலிருந்தே பள்ளியில் சொல்லித் தருவதால் அதுவே உண்மை என்ற உணர்வு வந்து விடும்.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்த குடி தமிழ்குடி என்ற வரிகள் யாருக்கும் தெரியாவண்ணம் மாறும். மொழியும் இலக்கணமும் கல்லூரி பாடத்திட்டத்திற்காக மாறி தமிழ் புத்தகம் என்பது உல்லுலாயியாக மாறும். மொழியும், வரலாறும் தாழ்வு மனப் பான்மையோடு மாற்றி அமைக்கப் படும்.
புவியியல் ரீதியாக வறட்சி பரவலாக்கப் பட்டு படித்தவர்கள் வேறிடம் மாற்றப் படுவார்கள். மிஞ்சியவர்கள் இங்கேயே அடிமைபோல மாற்றப் பட்டு மொத்தமாக சுரண்டப் படுவார்கள்.
ஆன்மீக ரீதியாக செய்யும் தொழிலே தெய்வம். அவனவன் செய்யும் தொழிலே முக்திக்கு வழி என்ற கருத்து ஆழப் பதிய செய்யப் பட்டு குலத்தொழிலுக்கு மூளை சலவை செய்யப் படுவார்கள்.
நீட் என்பது வெறும் கல்லூரி இட இழப்பு மட்டுமல்ல.., மொத்தமாக கோவணத்தை உறுவும் ஒரு செயல்திட்டம்.

கருத்துகள் இல்லை: