ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

வெற்றிவேல் :ரூ.500 கோடி பேரம் படிந்தது !கூச்சநாச்சம் இல்லாமல் ops+eps கம்பெனிகள் இணைப்பு

ஓபிஎஸ்-க்கு ரூ.500 கோடி பேரம் படிந்ததால் இரு கம்பெனிகள் இணைப்பு சாத்தியமாகியுள்ளது என டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். சென்னையில் டிடிவி தினகரன் இல்லத்தில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. அப்போது டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஓபிஎஸ்-க்கு பேரம் படிந்ததால் இரு கம்பெனிகள் இணைப்பு சாத்தியமாகியுள்ளது. துபாயில் 500கோடி ரூபாய் பேரம் வழங்கப்பட்டுள்ளது. இரு அணிகளின் இணைப்பிற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்களில் 98% பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவரை நம்பி சென்ற மூத்த நிர்வாகிகளை நடுத்தெருவில் விட்டுச் சென்றுள்ளார். ஒரு எம்.எல்.ஏ.வாக இருப்பவர். ஒரு கிணற்றையே விட்டுக்கொடுக்க மறுப்பவர், தர்மயுத்தம் தொடங்கியது மிக பெரிய தவறு. சொந்த கிராம மக்களுக்கு கிணரையே வழங்க மனமில்லாமல் இருக்கும் நிலையில், மக்கள் போராட்டம் நடத்தி மக்களுக்கு சொந்தமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பொழுது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தவர் ஓ.பி.எஸ், இரட்டை இலை சின்னத்தை முடக்கி பல துரோக்கத்தை செய்துள்ளார்.


இரு அணிகளின் இணைப்பு மக்களிடம் கேட்டு இணைப்பு உறுதி செய்யப்பட்டது என தெரிவித்தார். ஆனால் எந்த மக்களை எப்போது சந்தித்தார்? முதலமைச்சர், ஜெயலலிதா இறப்பில் நீதி விசாரணையை வரவேற்கிறோம். ஆனால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை இல்லாமல், பணியில் உள்ள மூத்த நீதிபதிகளை போட வேண்டும். ஆர்.கே.நகரில் நீதி விசாரணை வேண்டாம் என கூறினார். ஆனால் தற்போது ஏன் விசாரணை வேண்டும் என முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் வாரிசு என சிசிகலா, இளவரசி என இருவர் உள்ளனர். வேதா இல்லத்தில் இனி ஆய்வு மேற்கொள்ள சென்றால் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்படும். இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வோம். அமைச்சர்கள் கட்டப் பஞ்சாயத்து ஆரம்பித்துள்ளனரா? சசிகலா, இளவரசி இருவரின் ஒப்புதல் இல்லாமல் யாரும் உள்ளே செல்ல அனுமதி அளிக்க முடியாது. கட்சி விதிகளை மாற்றி முறைகேடாக துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தினகரனை நீக்கினார்கள்.
இதே போன்று சசிகலாவையும் நீக்க முடிவு எடுத்துள்ளனர். ஆனால், நாங்கள் செய்வதை பொருத்திருந்து பாருங்கள். டிடிவி தினகரன் கட்சியில் இருந்தால் தவறுகள் செய்ய முடியாது என்பதற்காகவே அவரை நீக்கினார்கள். திமுக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அப்பொழுது முடிவு எடுக்கப்படும். எங்கள் நடவடிக்கைகளை பொருத்திருந்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். படம் - செண்பகபாண்டியன் நக்கீரன்

கருத்துகள் இல்லை: