வெள்ளி, 28 ஜூலை, 2017

மோசடி வழக்கு : தயாநிதி மாறன் ஆஜர்!

மோசடி வழக்கு : தயாநிதி மாறன் ஆஜர்!
பி.எஸ்.என்.எல். இணைப்பு தொடர்பான மோசடி வழக்கில் தயாநிதி மாறன் இன்று ஜூலை 28ஆம் தேதி சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்தியத் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் பி.எஸ்.என்.எல். இணைப்புகளை தங்களது நிறுவனத்துக்கு முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜவஹர், தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதையொட்டி, தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று ஜூலை 28ஆம் தேதி நேரில் ஆஜரானார். இதில், கலாநிதி மாறன் இன்று நேரில் ஆஜராகவில்லை. அதனால், மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. மேலும், சி.பி.ஐ. தாக்கல் செய்த சில ஆவணங்கள் தெளிவாக இல்லாததால் தயாநிதி மாறன் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து தயாநிதி மாறனின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். ,  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: