புதன், 26 ஜூலை, 2017

தமிழ் சினிமாவை சீரழித்த போத்ரா (ஜெயின்) .. இந்த கந்து வட்டி கழிசடை பாஜக அங்கத்தவன் .. முன்பு அதிமுக...


தமிழ் சினிமாவை சீரழித்த போத்ரா!சினிமா துறையினர் என்றாலே சிரித்த முகத்துடன் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுபவர்களாகத்தான் மக்கள் அறிந்திருந்தனர். ஆனால், அவர்களையே சோக முகத்துடன் கேமரா முன்பு நிறுத்தியவர்களில் அல்டிமேட்டாக இருப்பவர் முகுந்த்சந்த் போத்ரா. இவரால் தமிழ் சினிமாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை எடுத்தால் பெரிய பட்டியலே தயாரிக்கலாம். ஆனால், அவரால் பாதிக்கப்பட்டவர்களைப்பற்றிப் படம் எடுத்தால் தயாரிப்பதற்கு சினிமா தயாரிப்பாளர்களே வரமாட்டார்கள். அந்தளவுக்கு சினிமாவில் பணத்தைக் கொட்டி பெரும்பாலான தயாரிப்பாளர்களை கார்னர் செய்துவைத்திருந்த போத்ரா இப்போது கைதாகியிருக்கிறார்.
பிஆர்சி இண்டர்நேஷனல் ஹோட்டலின் நிர்வாகி செந்தில் கணபதி கொடுத்த புகாரின் பேரில் போத்ரா கைது செய்யப்பட்டிருக்கிறார். செந்தில் கணபதி, போத்ராவிடம் வாங்கிய 83 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனைத் திரும்ப கொடுத்தபிறகும்கூட அசல் பணத்துக்கு வட்டி போட்டு, அந்த வட்டி குட்டி போட்டு, அந்த குட்டிக்கு செண்ட்ரல் ஜி.எஸ்.டி, ஸ்டேட் ஜி.எஸ்.டி மாதிரி விதவிதமாகக் கணக்குகாட்டி 4 கோடி ரூபாய் வரை பணம்தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார் போத்ரா. இந்த அநியாயத்தைப் பொருத்துக்கொள்ளமுடியாமல், மத்திய குற்றப்பிரிவின் கந்துவட்டி தடுப்புப் பிரிவில் செந்தில் கணபதி புகார் கொடுத்தார். போத்ரா மற்றும் அவரது மகன்களை அழைத்து விசாரித்த காவல்துறையினர் மூவரையும் கந்துவட்டி தடுப்புச்சட்டம்(2003) மற்றும் பல பிரிவுகளின்கீழ் கைதுசெய்திருக்கின்றனர்.


போத்ரா என்ற பெயரைக் கேட்டதற்கே ஆடிப்போயிருந்த திரையுலகினரில் பலர் இந்த கைது செய்தியினால் மகிழ்ச்சியடைந்ததுடன், போத்ராவால் பாதிக்கப்பட்டவர்களை அனுப்பி அவர்களது புகார்களை தூசி தட்டச் சொல்லியிருக்கின்றனர். காவல்துறை தரப்பில் ஏற்கனவே போத்ராவின் மீதான வழக்குகளை தூசி தட்டத் தொடங்கிவிட்டனர். போத்ராவை கைது செய்தபோது ஜே.எஸ்.கே ஃபிலிம்ஸின் சதீஷ் குமார் கொடுத்த புகாரினையும் இந்த வழக்கில் சேர்த்திருக்கிறார்கள்.

போத்ரா மாதிரியான ஆட்கள் பொதுவாகவே சிறு தயாரிப்பாளர்களையும், நீதிமன்றம் - போலீஸ் எனச் செல்லத் தயங்குபவர்களையுமே குறிவைப்பார்கள். ஆனால், போத்ரா ரஜினி - ஆர்.கே.செல்வமணி - பாரிவேந்தர் பச்சமுத்து - எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் என தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளர்களையே குறிவைத்து இதுவரை தாக்கியிருக்கிறார். ரஜினியின் சம்மந்தியும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா வாங்கிய பணத்துக்காக நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் ரஜினியின் பெயரையும் சேர்த்தது போத்ரா செய்த மிகப்பெரிய தவறு. அப்போது இந்த மனுவை நீதிமன்றம் எப்படி ஏற்றது? எனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பே இல்லையே என்று ரஜினி நீதிமன்றத்துக்கு பதில் கடிதம் எழுதும் அளவுக்கு அந்தப்பிரச்னை சென்றது. சமீபத்தில் பொறியியல் கல்லூரி சேர்க்கையில் தயாரிப்பாளர் மதன் சிக்கியபோதும் உள்ளே புகுந்து தனக்கும் பணம் தரவேண்டும் என்று சொல்லி, மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் செய்தவர் போத்ரா.
தயாரிப்பாளர்கள் பணக்கஷ்டத்தில் இருக்கும்போது தேடிச் சென்று பணம் கொடுத்து பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, அதைத் திரும்பக் கொடுக்கவரும்போது பத்திரத்தை மாற்றி எழுதி அநியாய வட்டியையும் சொத்துக்களை எழுதிக் கேட்பதும் போத்ராவின் ஸ்டைல். மயிலாடுதுறையில் அவரது தந்தை செய்துவந்த வைர வியாபாரத்தை சென்னையில் கந்துவட்டிக்குப் பணம் கொடுத்து, மீண்டும் வைர வியாபாரத்தைத் தொடங்குமளவுக்கு பணக்காரராக மாறியிருக்கிறார் போத்ரா. இவர் தமிழகத்தின் அதிமுக கட்சியிலும் சில காலம் இருந்தவர். அதேசமயம் சென்னையில் ஜெயின் மதத்துக்கான கோவில்களை பராமறிப்பதும் போத்ராவின் வாழ்க்கையில் உண்டு. இவர் பாஜக கட்சியிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: