புதன், 26 ஜூலை, 2017

விக்ரம் வேதா .. மாதவனை தூக்கி சாப்பிட்ட விஜய் சேதுபதி?

Divya Bharathi. இத்தனை களேபரேங்களுக்கு மத்தியிலும் இன்று "விக்ரம் வேதா" படம் பார்க்க திரையரங்கு சென்றிருந்தேன். (இதுக்கெல்லாம் விமர்சிக்க தொடங்காதீர்கள்)
எப்படியோ எனக்கே தெரியாமல் நடிகர் விஜய் சேதுபதிக்கு பீட்சா'விலிருந்தே ரசிகை ஆகியதால் தான் இந்த படம் பார்த்தே ஆக வேண்டுமென முடிவெடுத்து டிக்கெட்டுக்கு நாயா பேயா அலைஞ்சு,எல்லா தியேட்டரும் House full ஆக ஒரு வழியா மதுரையின் மொக்கை தியேட்டர் ஒன்றில் அனைத்து தரப்பு மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் அமர்ந்து படம் பார்த்து விட்டு சற்று முன் வீடு வந்து சேர்ந்தேன்.
படம் பற்றியெல்லாம் எதுவும் எழுதப் போவதில்லை. இந்த படத்தில் நடித்துள்ள இரண்டு முதன்மை நடிகர்கள் பற்றி தான் இந்த பதிவு.சமூக அக்கறை எல்லாம் ஒன்னுமில்ல இந்த பதிவுல. அதை என் பதிவுகளில் எதிர்பார்ப்பவர்கள் மேற்கொண்டு இதை படித்து என் மீது கடுப்பாகாதீர்கள்.
மாதவன் எங்களின் கனவு நாயகனாக இருந்தவர் தான்.
அலைபாயுதே,மின்னலே, டும் டும் டும், ஆயுத எழுத்து என எங்கள் Maddyக்கு அப்படியொரு ரசிகை கூட்டமிருந்தோம். ஆனால் இன்று விக்ரம் வேதா படத்தில் மாதவனின் அறிமுக காட்சியிலோ, அதிரடி காட்சியிலோ பார்வையாளர்கள் தரப்பில் இருந்து ஒரு சிறு கைதட்டலோ, ஒரு சின்ன விசில் சத்தமோ எழவே இல்லை. பரிதாபமாக இருந்தது.ஆனால் விஜய் சேதுபதியின் அறிமுக காட்சிக்கு திரையரங்கமே அதிர்ந்தது. வி.சேதுபதி சின்னதா சிரிச்சா, சின்னதா பார்த்தா, லைட்டா அசைஞ்சா கூட அரங்கம் அலறியது. நானே கூட மாதவனை பார்க்காம வி.சேதுபதி வர காட்சிக்காக தான் காத்திருந்தேன்.
நம்மவர்களில் ஒருவரா இயல்பா வாழ்ந்து என்னமோ செய்றாரு தான் அந்த விஜய் சேதுபதி. நானே இனிக்கு முழு ரசிகை ஆகிட்டேன் அவருக்கு.தமிழ் சினிமாவில் ஒரு பெரிய சுற்று வர வாழ்த்துக்கள்.
(நடிகர் விஜய் சேதுபதி குறித்து கூடுதல் தகவல் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். கக்கூஸ் டிரையிலரை பார்த்தவுடன் விஜய் சேதுபதி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நீண்ட நேரம் துப்புரவு பணி அரசியல் குறித்து பேசினார்.நான் உங்க படத்துக்கு எதாவது செய்யனும் என்ன பண்ணனும்ன்னு சொல்லுங்கன்னு கேட்டாரு, இறுதியில் கக்கூஸ் படத்தின் post production வேலை நடந்த Studioவிற்கு 30000ரூபாயை அவரே தான் செலுத்தினார்.)
இன்று நடிகர் சூர்யாவை பின்னுக்கு தள்ளிவிட்டு விஜய் சேதுபதி அவர்களுக்கு ரசிகையும் ஆனதில் திவ்யா ஹேப்பியோ ஹேப்பி

கருத்துகள் இல்லை: