வியாழன், 27 ஜூலை, 2017

நிதிஷ்குமார் காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். பாஜக கூட்டு அரசு !

பாட்னா: பீகார் முதல்வராக நிதிஷ்குமார் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். நிதிஷ் மற்றும் சுஷில் மோடி இருவர் மட்டுமே இன்று பதவியேற்க உள்ளனர்.சமீபத்தில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ள, லாலு பிரசாத்தின் மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வியுடன் இணைந்து ஆட்சியை செயல்படுத்த விரும்பாததால், பீஹார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார், நேற்று ராஜினாமா செய்தார். தொடர்ந்து பா.ஜ.,வுடன் கூட்டணி அணைத்து ஆட்சி அமைக்க பீகார் கவர்னர் திரிபாதியை சந்தித்து ஆட்சியமைக்க நிதிஷ் உரிமை கோரினார். 132 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு பட்டியலையும் அளித்தார்.இந்நிலையில் இன்று(ஜூலை 27) மாலை 5 மணிக்கு முதல்வராக நிதிஷ் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலை 10 மணிக்கே முதல்வர் பதவியேற்க உள்ளார். இதனை பா.ஜ., மாநிலத் தலைவர் சுஷில் மோடி தெரிவித்தார். மேலும் நிதிஷ்குமார், சுஷில் மோடி ஆகிய இருவர் மட்டுமே இன்று பதவியேற்க உள்ளனர்.முன்னதாக லாலு தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி இன்று காலை 11 மணிக்கு கவர்னரை சந்திக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது. தினமலர்

கருத்துகள் இல்லை: