வெள்ளி, 28 ஜூலை, 2017

சீமானுக்கும் குறி? திருமுருகன் காந்தி, வளர்மதியைத் தொடர்ந்து...

Mathi o Oneindia Tamil சேலம்: 
தமிழர் உரிமைகளுக்காக போராடிய திருமுருகன் காந்தி, வளர்மதி உள்ளிட்டோரைத் தொடர்ந்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தமிழ் உணர்வாளர்கள் பலரையும் அச்சுறுத்தி வருகிறது குண்டர் சட்டம். முதலில் திருமுருகன் காந்தி, பின்னர் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சீமான் மீது வழக்கு கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் மீதும் குண்டர் சட்டம் பாயலாம் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் சேலம் போலீசார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழ் தேசிய இன மக்கள் சந்திக்கும் சிக்கல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியினர் கடந்த 4-ந் தேதி பொதுக்கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் பேசிய சீமான், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்;
இளைஞர்களை தூண்டிவிடும் வகையில் பேசினார் என பொதுக்கூட்டத்துக்கு பாதுகாப்பு சென்ற போலீசார் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய சேலம் போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார். தற்போது சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மாணவி வளர்மதி மீது வழக்குப் பதிவு செய்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததும் இதே சேலம் போலீஸ்தான். இதனால் சீமான் மீதும் குண்டர் சட்டம் பாயக் கூடும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: