திங்கள், 24 ஜூலை, 2017

தமிழ்நாடு மட்டுமல்ல கர்நாடகா , மகாராஷ்டிரா ,ஒரிசா , கேரளா எங்கும் மொழிவுரிமைக் குரல்

Thagadoor Sampath பகிர்வுப் பதிவு **** கர்நாடகாவில் இந்தி எதிர்ப்பு ,மாநிலத்துக்கு தனிக்கொடி , சுமார் எண்பது லட்சம் பேர் கொண்ட லிங்காயத் சமூகம் இந்து மதத்தின் அங்கமல்ல என எழும் குரல்கள் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல . தமிழ்நாடு மட்டுமல்ல மகாராஷ்டிரா ,ஒரிசா , கேரளா எங்கும் மொழிவுரிமைக் குரல் கேட்கத் துவங்கிவிட்டது . ஒரு மொழி ,ஒரு கலாச்சாரம் , ஒரு நாடு எனக்கூறிக்கொண்டு சமஸ்கிருதம் - பிராமணியக் கலாச்சாரம் - இந்தியா என் ஒற்றை நாடாக்க இந்திய ஒன்றியத்தை ஆளும் மதவெறி பாஜக முயல்வதும் ; பல மொழி - பன்முக கலாச்சாரம் - இந்திய ஒன்றியம் எனும் கட்டமைப்பைத் தகர்க்க முனைவதும் எதிர்வினையையே உருவாக்கும் . இப்போது எழும் குரல்கள் ஆரோக்கியமானவை ; மாநில மொழி ,பண்பாடு , மாநில உரிமை , பாதுக்காக்கப்பட போராட்டங்கள் வீறுகொள்ளட்டும் . இந்த ஜனநாயக் போராட்டம் முன்னெடுக்கப்படாவிடில் - மதிக்கப்படாவிடில் விளைவுகள் விபரீதமாகவே அமையக்கூடும் . Mozhi#culture#

கருத்துகள் இல்லை: