புதுச்சேரி: புதுச்சேரி கண்ணன், புதுவையின் "புரட்சித் தலைவர்" என்று
கூறும் அளவுக்கு பல புரட்சிகளைப் படைத்தவர். காங்கிரஸ்காரரான இவர்
அக்கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மூப்பனாரின் அன்பைப்
பெற்றவர். அவர் இருந்தவரை புதுவை காங்கிரஸில் கோலோச்சி வந்தார்.
காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளார். புதுச்சேரி மாநில சட்டசபையின் சபாநாயகராகவும், அமைச்சராகவும், பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். பின்னர் தமிழ் மாநில காங்கிரஸுக்கு மாறினார். அதன் பின்னர் புதுக் கட்சி தொடங்கினார். பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பினார். கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார் கண்ணன். ஒரு ஆண்டு காலம் அதிமுகவில் கட்சிப்பணியாற்றினார் கண்ணன்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் சசிகலா பொதுச்செயலாளரான போது கருத்து எதுவும் கூறாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சசிகலா முதல்வராக கண்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் கண்ணன். அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கண்ணன் அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசியலில் பல்வேறு பொறுப்புகளை வகித்த கண்ணன் கடைசியில் சசிகலா முதல்வரானதால் வெறுத்து போய் அதிமுகவில் இருந்தே விலகியுள்ளார். அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா? அல்லது மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைவாரா? என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும் tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக