வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

கூவத்தூர் சிறப்பு முகாமில் (ரிசோர்ட்) 12 எம் எல் ஏக்கள் உண்ணாவிரதம்

நக்கீரன் : சசிகலா கோஷ்டியின் பிடியில் உள்ள 12 எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம்! கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள 12 எம்.எல்.ஏக்கள் தடபுடல் விருந்துகளை தவிர்த்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சசிகலா கோஷ்டியினர் அதிமுக எம்எல்ஏக்களை சொகுசுப் பேருந்தில் அழைத்துச்சென்று அவர்களை நேற்றிரவு முதல் கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூரில் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளனர். எம்எல்ஏக்கள் மற்றவர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களை கண்காணிக்க மன்னார்குடியில் இருந்து கும்பல் இறக்கப்பட்டுள்ளதாக தகவல். ரிசார்ட் பகுதியாக அன்றாடப் பணிக்கு செல்லூம் மக்களைக் கூட விடாமல் தடுத்து அவர்களை அடித்து விரட்டி வருகின்றனர்.
இந்த அராஜகத்தால் கூவத்தூர் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏக்களுக்கு பொறுப்பாளராக இருந்துவரும் செந்தில்பாலாஜி, விஜயபாஸ் கடும் கட்டுப்பாடு விதிப்பதாகவும், எம்.எல்.ஏக்களை உறவினர்களோ, ஓபிஎஸ் தரப்பினரோ தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு பாதுகாப்பாக இருப்பதாலும், எம்.ஏல்.ஏக்கள் ஆவேசம் அடைந்துள்ளதாகவும் தகவல். இந்நிலையில், எம்.எல்.ஏக்களுக்கு வைக்கப்படும் தடபுடல் விருந்தை புறக்கணித்து விட்டு 12 பேர் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல்.

கருத்துகள் இல்லை: