வியாழன், 9 பிப்ரவரி, 2017

அம்மா - சின்னம்மா என்று பம்மிய பன்னீர்.. .திடீரென்று பொங்குவதன் ரகசியம் இதுதான்!


முதல் இரண்டு  முறை முதல்வராக இருந்தபோது எப்படி அமரர் ஜெயலலிதாவின் கைப்பாவையாக இருந்தாரோ, அதேபோல தனக்கும் கட்டுப்பட்டு இருப்பார் என திருமதி சசிகலா நினைத்தார்.... அதற்கு தகுந்தாற்போல் ஆரம்பத்தில் திரு பன்னீர் செல்வமும் சின்னம்மா என அழைப்பதாகட்டும், பொதுச்செயலாளராக அறிவிப்பதாகட்டும், காலில் விழுவதாகட்டும் அனைத்தையுமே கனகச்சிதமாகவே செய்தார்..... பின்னர் திரு பன்னீர் செல்வத்துக்கும் ஒரு ஆசை வந்துவிட்டது (ஒருவேளை முன்னரே இருந்த ஆசையை வெளியே காட்டாமல் கூட இருந்திருக்கலாம்)....தானே நிரந்தர முதல்வராக இருக்க வேண்டும் என்று....பதவியை தக்க வைக்க மக்களின் ஆதரவாவது தேவை என உணர்ந்து சுறுசுறுப்புடன் (விடுப்பு நாட்களில் கூட தலைமை செயலகம் செல்வது போன்ற சில) செயல்பட்டார் (பொறுப்பு முதல்வராக இருக்கும் போது, தலைமை செயலகமும் செல்லாமல், ஒரு மருத்துவரை கூட கண்டு பேசாமல் அப்பல்லோ மருத்துவமனையிலே என்ன செய்து கொண்டு இருந்தார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்).... அதனால் முதல்வர் கனவில் இருந்த திருமதி சசிகலா இவரை பதவியை விட்டு விலக கூறியுள்ளார்....
இந்த நிலையில், சரி எனக்கு எப்பவுமே 2 ஆம் இடம்தான் என தன்னை தானே தேற்றிக்கொண்டு, அமைதியாக அதை ஒப்புக்கொண்டு, திருமதி சசிகலா பெயரை முன் மொழிந்து விட்டு, திருமதி சசிகலாவிடமும் சிரித்து சிரித்து பேசிவிட்டு வீட்டுக்கு சென்றார்.... கடந்த 2 நாட்களில் திருமதி சசிகலாவுக்கு மீதான மக்களின் எதிர்பலையை கண்டவருக்கு, மீண்டும் முதல்வர் ஆசை துளிர்விட, இந்த தருணத்தை தனக்கு சாதகமாக்கி கொள்ளலாமே என்ற எண்ணத்துடன் மற்றும் சிலரின் ஆதரவுடன் பொங்கி விட்டார் அல்லது நாடகத்தை தொடங்கி விட்டார்.......பெரும்பாலான மக்களும் எல்லாவற்றையும் நம்புவது போல் இதையும் நம்பிவிட்டனர்.... இதுதான் உண்மை.... அமரர் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவேன் என இன்று கூறுபவர், 2 மாதத்துக்கு முன்பே திருமதி சசிகலாவை அந்த வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, நினைவு இல்லமாக ஆக்கி இருக்கலாமே.... இன்று திருமதி தீபாவுக்கு அழைப்பு விடுப்பவர், அமரர் ஜெயலலிதா இறந்த அன்று, மனிதாபிமான அடிப்படையில் இறந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவாவது அப்பெண்ணுக்கு உதவி இருக்கலாமே.... விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று இன்று கூறுபவர், கடந்த 60 நாட்களும் கூறாதது ஏனோ? மறைந்த முதல்வர் மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை, மக்களின் சந்தேகத்தை போக்கவே விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தனியார் தொலைக்காட்சி பேட்டியில் கூறும் நீங்கள், உங்களுக்கு ஏன் சந்தேகம் இல்லை என விளக்கி இருக்கலாமே... என்னமோ நடக்குது.... காமெடியா இருக்குது....  தினமலர் .. வாசகர்

கருத்துகள் இல்லை: