புதன், 8 பிப்ரவரி, 2017

மெரீனாவில் தீ வைத்த போலீஸ் தப்புகிறது .. அதிகாரிகள் உடந்தை ..

போராட் டம் நடத்திய மாணவர்களை, "சமூகவிரோதிகள், கல் வீசினார்கள், பொதுச்சொத்துக்கு சேதம் விளை வித்தார்கள்' என கொலை முயற்சி உட்பட அதிக தண்டனை பெறும் செக் ஷன்களில் கைது செய்த போலீஸார்... அதேநேரத்தில் "பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார்கள்' என சமூக ஊடகங்கள் உட்பட பல மீடியாக் கள் ஆதாரத்துடன் குற்றம்சாட்டப்படும் போலீஸ்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என விசாரணையில் இறங்கி னோம். கடந்த நக்கீரன் இதழில் "இதோ தீ வைத்த போலீஸ்' என புகைப்படத்துடன் வெளியிட்ட ரங்கராஜன்ராஜா பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது, வைரலாக ஷேர் செய்தனர். போராட்டத்தை வழிநடத்திய இளைஞர்களின் தலைவர்களில் ஒருவரான மேத்யூ, ""போராட்டக் களத்தில் சமூகவிரோத செயல் களைச் செய்து, ஆட்டோ மற்றும் வீடுகளுக்கு தீ வைத்தது போலீசார்தான் என ஆட்டோவை கொளுத்திய ரங்கராஜன் ராஜா என்கிற போலீசின் புகைப்படத்தையும் வெளியிட்ட நக்கீரனின் செயல் பாராட்டத்தக்கது'' என்றார்.


இந்தச் செய்தி யில் சென்னை நகர உளவுத்துறை தலைவராக உள்ள தாமரைக்கண்ணன், அண்ணாநகர் துணை கமிஷனர் பெரோஸ்கான், உதவி ஆணையாளர்கள் காமில் பாஷா, யுவராஜ் ஆகியோர் இணைந்து தான் ரூதர்புரத்தில் குடிசைகளுக்கும் ஆட் டோக்களுக்கும் தீ வைத்தார்கள். ரூதர்புர மக்களை அடித்து உதைத்தார்கள் என எழுதியிருந்தோம். மாநில உளவுப்பிரிவு ஐ.ஜி.சத்தியமூர்த்தி "இதுகுறித்து விளக்க வேண்டும்' என தாமரைக் கண்ணனிடம் கேட்டார்.

சத்தியமூர்த்தியின் தொலைபேசி வந்ததும் தாமரைக்கண்ணன் டென்ஷன் ஆனார். பெரோஸ்கான், யுவராஜ் ஆகியோரை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வர வழைத்தார். அந்த சந்திப்பு முடிந்ததும் எரிப்பு நடவடிக்கை களில் தொடர்புடைய ரங்கராஜன் ராஜா, மகாலட்சுமி (எ) லட்சுமி, குணசுந்தரி ஆகியோர் கமிஷனர் அலுவலகத்திற்கு ரகசியமான வழியில் சிவில் டிரஸ்ஸில் அழைத்து வரப்பட்டனர். இந்தச் சந்திப்புகள் முடிந்ததும் கமிஷனர் ஜார்ஜை சந்தித்துப் பேசினார் தாமரைக்கண்ணன். அங்கிருந்து தமிழக உள்துறையிடம் சென்னை நகர போலீ சார் பேசினார்கள். உள்துறை அதிகாரிகள், மாநில சட்டத் துறையிடம் ஆலோ சனை கேட்டார்கள். இந்தச் சந்திப்புகள் மற்றும் ஆலோசனை களின் விபரங்கள் குறித்து நம்மிடம் காவல் துறை அதிகாரிகள் பேசினார்கள்.

""மதுரை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, அவரது அப்பாவான கர்நாடக போலீஸ் அதிகாரி சங்கர்பிதாரி போலவே தமிழர்களுக்கு எதிரான சிந்தனை கொண்டவர் என்பதை டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனிடம் தெரிவித்தாராம் சத்தியமூர்த்தி. ஜல்லிக்கட்டு நடப்பதற்கு ஒருவாரம் முன்பே "விஜயேந்திர பிதாரியை "ஜல்லிக்கட்டு போராட்டத்தை கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் காவல் வேலைகளில் ஈடுபடுத்த வேண்டாம்' என நேரிலும் போனிலும் எடுத்துச் சொன்னார்.

மறுநாளும் மறக்காமல் டி.ஜி.பி.யிடம் இதை ஞாபகப்படுத்தினாராம். உடனடியாக இதுகுறித்து உயர்மட்ட ஆலோசனை நடத்திய டி.ஜி.பி., பிதாரியை அதே பதவியில் நீடிக்க விட்டுவிட்டார். விஜயேந்திர பிதாரி... ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைக் கையாள முன்னாள் காவல்துறை டி.ஜி.பி. ராமானுஜம் இந்நாள் டி.ஜி.பி.க்கு அட்வைஸ் செய்தார் என்றும் அதிகாரிகள் சொல்கிறார்கள்.

இதனால் அலங்காநல்லூரில் வெடித்த போராட்டம் சென்னை மெரினாவிற்கு பரவியது. இறுதியில் போராட்டத்தை அடக்கப்போன போலீஸார் சமூகவிரோத செயல்களான சொத்துக்களுக்கு தீ வைப்பது போன்ற செயல் பாடுகளில் ஈடுபட்டது சத்தியமூர்த்திக்குப் பிடிக்க வில்லை. அதனால்தான் தாமரைக்கண்ணனிடம் விளக்கம் கேட்டார். அந்த விளக்கத்திற்கு விளக்கம் அளிக்க தமிழக அரசின் சட்டத்துறை வரை சென்னை நகர போலீஸார் சென்றார்கள்'' என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை நகர போலீசார் கேட்டதற்குப் பதிலளித்த தமிழக சட்டத்துறை, ""சமூகவிரோத செயல்களில் போலீசார் ஈடுபட்டார்கள் என்பது நிரூபிக்கப்பட்டால் அவர்களை துறைரீதியாக சஸ்பெண்ட் செய்யவேண்டும். பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள் என போராடிய மாணவர்களையும் இளைஞர்களையும் கைது செய்தது போல, போலீஸாரையும் ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்'' என விளக்கமளித்தது. இந்த விளக்கத்தைக் கேட்ட மூன்று போலீசாரும், ""எங்களை குற்றவாளிகளாக்கி னால் ஆட்டோவையும் வீட்டையும் கொளுத் தச் சொன்ன டி.சி. பெரோஸ்கானையும், உளவுப்பிரிவு கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணனையும் காட்டிக்கொடுப்போம்'' என உறுதியாகச் சொன்னார்கள்.

எங்கே விசாரணை தங்கள் மீது திரும்பிவிடுமோ என பயந்த சென்னை நகர போலீசார், குற்றம்சாட்டப் பட்ட மூவரையும் "கொஞ்சநாட்கள் மீடியா கண்ணில் படாமல் தலைமறைவாக இருங்கள், உங்கள் மீது துறை ரீதியாகக் கூட நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது' என உறுதியளித்து... அவர்களை தங்களது கண்காணிப்பில், ரகசிய இடத்தில் தங்க வைத்துள்ளனராம். -தாமோதரன் பிரகாஷ் -அருண்பாண்டியன் நக்கீரன்

கருத்துகள் இல்லை: