சென்னை: ‛ஆளும் கட்சியாக தி.மு.க., இருந்த போது, சசிகலா குடும்பத்தினர் நடத்தி வரும் ‛மிடாஸ்' சாராய ஆலைக்காக, தி.மு.க., வை சந்தித்தது யார் என எனக்கு தெரியும்' என பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சசிகலா முதல்வராவதற்கு எதிராக கிளம்பியுள்ள பன்னீர் செல்வம், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவருக்கு பின்னால் தி.மு.க., இருப்பதாகவும். எதிர்கட்சி தலைவருடன் அவர் சிரித்து பேசியதாக சசிகலா தரப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் தெரிவித்ததாவது: தி.மு.க.,வுடன் நான் ஒரு போதும் இணக்கமான சூழ்நிலையை கையாண்டது கிடையாது. எதிர்கட்சியினருடன் சிரிந்து பேசுவதெல்லாம் குற்றம் ஆகாது. அ.தி.முக., எதிர்கட்சியாக இருந்து தி.மு.க., ஆளும் கட்சியாக இருந்த சமயத்தில் சசிகலா குடும்பத்தினர் நடத்தி வரும் ‛மிடாஸ்' சாராய ஆலையில் இருந்து டாஸ்மாக்கிற்கு மதுபானங்களை வாங்க ஒப்பந்தம் செய்ய யார் தி.மு.க., வினரிடம் பேசினார் என்பது எனக்கு தெரியும். அதன் மூலமே யார் தி.மு.க.,வுடன் இணக்காமான உறவை கையாண்டார்கள் என புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பதலளித்துள்ளார்.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக