வியாழன், 29 செப்டம்பர், 2016

நக்கீரன்டா .... ஜனநாயகத்தின் உண்மையான நாலாம் தூண் நக்கீரன் மட்டும்தான்! வாழ்த்துக்கள்

Image may contain: 1 person , text
புழலில் வழக்கமாக மாலை 5 மணியிலிருந்து 5:45 மணிக்குள்ளாகத்தான் கைதிகளை அறைக்குள் வைத்து பூட்டுவார்கள். ஆனால், வழக்கத்துக்கு மாறாக ராம்குமார் படுகொலை செய்யப்பட்ட அன்று மாலை 3: 45 மணிக்குள்ளேயே சிறைக்கைதிகளை அவரவர்களின் அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு ராம்குமாரின் படுகொலையை நிகழ்த்தியிருக்கிறது காவல்துறை. உண்மையில் ராம்குமார் சிறையிலேயே மரணமடைந்துவிட்டார். ஆனால், அவரது உயிரைக்காப்பாற்றுவதுபோல் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் கொண்டுவந்து நாடகமாடியிருக்கிறார்கள், சிறைமருத்துவர்களும் போலீஸும் என்ற பல்வேறு தகவல்களுடன், “எங்களை பூட்டிட்டு ராம்குமாரை முடிச்சுட்டாங்க” புழல் சிறை கைதியின் வாக்குமூலத்தை துணிச்சலோடு நேற்று வெளியான நக்கீரனில் அம்பலப்படுத்திய மனோவுக்கு Mano Soundar Mano வாழ்த்துகள் <3 span=""> ஏற்கனவே அப்படித்தான், ‘தண்ணீர் குடிக்க கிச்சனுக்குப்போன ராம்குமார் சிறையில் தற்கொலை!’ என்றே பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்தபோது, ராம்குமார் கிச்சனுக்குப் போகவேண்டுமென்றால் எதையெல்லாம் கடந்து செல்லவேண்டும் என்று புழல் சிறையையே கண்முன் நிறுத்தி, ‘சிறைக்கொலை! முடிக்கப்பட்ட ராம்குமார்! மூடப்பட்ட ஸ்வாதி ஃபைல்’ என்று தில்லாக அட்டைப்பட செய்தி வெளியிட்டது நக்கீரன்தான்.
’ராம்குமார் கிச்சனுக்குப்போகவில்லை. அவன் அடைக்கப்பட்டிருந்த அறைக்கதவின் ஓரத்திலுள்ள ஸ்விட்ச் பாக்ஸை உடைத்து, பல்லால் கடித்து தற்கொலை செய்துகொண்டான்’ என்று சிறைத்துறைப்போலீஸ் மீண்டும் ட்விஸ்ட் அடித்து இரண்டு ஃபோட்டோக்களையும் வெளியிட, அதுவும் பொய்யானது என்பதை, ‘இது வேறமாதிரி என்கவுண்டர்! ராம்குமார் உயிர் பறிப்பு உண்மைகள்’என்றத் தலைப்பில் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியது நக்கீரன். விரைவில்...ராம்குமார் கொலையாளிகள் அம்பலப்படுத்தப்படுவார்கள்!!! மிக சிறப்பாக புலனாய்வு செய்து தொடர்ந்து உண்மையை வெளியிட்டுவரும் நக்கீரனுக்கும் மனோவுக்கும் வாழ்த்துகள்! <3 span=""> குட் இன்வெஸ்டிகேஷன்! முகநூல் பதிவு   Vini Sharpana

கருத்துகள் இல்லை: