ஐதராபாத்: தெலுங்கானா மாநில சிறையில், கட்டணம் செலுத்தி தங்கி பின், மூன்று பேரும் சிறையில் அடைக்கப் பட்டனர். ஒரு நாள் சிறைவாசத்துக்கு பின், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
சிறை அனுபவம் குறித்து, அவர்கள் கூறுகையில், 'இந்த அனுபவம், எங்களுக்கு புதுமையாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது; இங்கு அளிக்கப்பட்ட கதராடை, தட்டு போன்ற பொருட்களும், உணவும் வித்தியாசமான அனுபவத்தை தந்தன. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது' என்றனர்.
சிறை அருங்காட்சியக பொறுப்பாளர் லக் ஷமி நரசிம்மா கூறியதாவது: கடந்த, 20 நாட்களில், எட்டு பேர், சிறைக்கு வந்து சென்றுள்ளனர். இவர்களில், மூன்று பேர், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோர். லாரி டிரைவர் ஒருவரும், சிறைக்கு வந்தார். நள்ளிரவில், அவர் பயந்து அலறியதால், பாதியிலேயே அவரை விடுவித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
செல்லும் வசதி துவங்கப்பட்ட பின், ஐ.டி., எனப்படும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த மூன்று ஊழியர்கள் தங்கியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. மேடக் மாவட்டத்தில், 200 ஆண்டுகள் பழமையான, சங்கா ரெட்டி மத்திய சிறைச்சாலை உள்ளது. அந்த வளாகத்தில் புதிய சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளதால், பழைய சிறை, அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. சிறை அனுபவம் பெற விரும்புவோர், 500 ரூபாய் செலுத்தினால், அந்த சிறையில் ஒரு நாள் தங்கலாம் என, அறிவிக்கப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் நிதிஷ் ரெட்டியும், அதே நிறுவனத்தில் பணியாற்றும் அவரது நண்பர்கள் இருவரும், சமீபத்தில் சிறைக்கு வந்தனர். தலா, 500 ரூபாய் செலுத்திய அவர்களுக்கு, கைதிகளுக்கு வழங்கப்படும், கதராடை, தட்டு, டம்ளர், சோப்பு, படுக்கை ஆகியவற்றை, சிறை அதிகாரிகள் வழங்கினர். அவர்களிடம் இருந்த, மொபைல் போன், பர்ஸ் ஆகியவற்றை அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர்; dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக