காவிரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது. காவிரியில் தமிழகத்துக்கான நீரை கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 20-ந் தேதியன்று செப். 27-ந் தேதி வரை 6,000 கன அடிநீரை திறந்துவிட உத்தரவிட்டது.
ஆனால் கர்நாடக அரசு இந்த உத்தரவை மதிக்கவில்லை. கர்நாடகா சட்டசபையை கூட்டி காவிரி நீர் குடிநீருக்குத்தான் என தீர்மானம் போட்டது. மேலும் உச்சநீதிமன்றத்திலும் காவிரியில் தற்போது தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது; டிசம்பரில் சேர்த்து தருகிறோம் என ஒரு மனுவை கர்நாடகா தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரிக்க கூடாது தமிழக அரசு தரப்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே இன்று காவிரி நீர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடகா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் இருப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று சாடினர் நீதிபதிகள். ஆகையால் நன்னடத்தையை வெளிப்படுத்தும் விதமாக இன்றும் நாளையும் காவிரியில் தமிழகத்துக்கு 6,000 கன அடிநீரை திறந்துவிட மீண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாரிமனிடம், உச்சநீதிமன்ற உத்தரவுகளை மதித்து நடப்பது நல்லது என உங்கள் முதல்வரிடம் கூறுங்கள் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டு கூறினர். tamil.oneindial.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக