கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே பாஜகவினரும், இந்து முன்னணி அமைப்பினர் ஏராளமானோர் திரண்டனர். தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். அகில இந்திய பாரதிய ஜனதா செயலாளர் எச்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, உள்பட 700 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் வேப்பேரி, நுங்கம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபம், சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
வேப்பேரியில் உள்ள மண்டபத்தில் மாலை 5 மணியளவில் மண்டபத்தின் உள்ளே முஸ்லீம் மதத்தை சேர்ந்த 4 நபர்கள் பெட்ரோல் குண்டுகளூடன் நுழைந்தனர். அந்த நாலு பேரில் ஒரு இளைஞர் பெட்ரோல் குண்டை எடுத்து மண்டபத்தின் உள்ளே இருந்த பாஜகவினர் மீது வீச முற்பட்டபோது, தொண்டர்கள் பாய்ந்து வந்து அந்த இளைஞரை பிடித்துக்கொண்டனர். அப்போது அந்த 4 பேரில் 3 பேர் தப்பிவிட்டனர். பிடிபட்ட அந்த முஸ்லீம் இளைஞரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.;எச்.ராஜா, தமிழிசையை குறிவைத்து தாக்குதல் நடத்த வந்ததாக பதட்டமானது அந்த பகுதி.
இந்த சம்பவம் குறித்து எச்.ராஜா, ‘’முழுக்க முழுக்க எங்களை குறிவைத்த தாக்க முற்பட்ட முஸ்லீம் இளைஞனை பிடித்து தரும்போது, பெட்ரோல் குண்டை மறைத்து அவனை காப்பாற்ற முற்பட்டது போலீஸ். காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி எப்படி அந்த இளைஞர்கள் உள்ளே நுழைந்தார்கள். இதில் சந்தேகம் உள்ளது. காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று ஆவேசத்துடன் கூறினார்.
தமிழிசையும் காவல்துறை மெத்தன போக்காக நடந்துகொண்டதாக, இந்துத்துவத்திற்கு எதிராகவும் இருப்பதாக குற்றம் சுமத்தினார். - அருண்பாண்டியன் நக்கீரன்,இன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக