திங்கள், 26 செப்டம்பர், 2016

விடியோவில் சிக்கிய 80 பேர் கைது . கோவை கலவரம் இந்து முன்னணி

கோவை:கோவையில், இந்து முன்னணி நிர் வாகி சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போது, நடந்த வன்முறை காட்சிகள் அடங்கிய, 'வீடியோ' பதிவுகளை ஆராய்ந்த போலீசார், மேலும், 80 பேரை கைது செய்துள்ளனர். கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார், 22ம் தேதி இரவு, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மறுநாள் நடந்த இறுதி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, இந்து இயக்க தொண்டர்கள் உட்பட, 132 பேரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக, 270 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.;வீடியோ காட்சிகள் வன்முறை காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு களை ஆராய்ந்த போலீசார், மேலும், 80 பேரை கைது செய்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக,மாவட்டத்தில், 84 பேரும்; மாநகரில், 21 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம், 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


கோவை சுந்தராபுரத்திலுள்ள, டூ - வீலர் விற்பனை மைய ஷட்டர் நேற்று அதிகாலை, 3:45 மணிக்கு எரிந்ததை, ரோந்து போலீசார் பார்த்து, தீயை அணைத்தனர்.

இங்குள்ள கேமரா பதிவை ஆராய்ந்த போது, இரு வாலிபர்கள், முகத்தை மூடி, ஷட்டரின் கீழ் பகுதி யில், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தப்பியது தெரியவந்தது.இந்த மையம்,குறிச்சி ஆர்.எஸ்.எஸ்., செய்தி தொடர்பாளருக்கு சொந்தமானது; மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

டூ - வீலர் மையத்தில் தீ

கொலையான சசிகுமாரின் மனைவி யமுனா, கண்ணீருடன், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ''என் கணவர், 15 ஆண்டுகளுக்கு முன், இந்து முன்னணியில், முழு நேர பணி
யாளராக இருந்தார்.

சில ஆண்டுகளாக, மாநகர் மாவட்ட செய்தி தொடர்பாளராக பணிபுரியத் துவங்கினார். யாருக்கும் தீங்கிழைக்காத, அப்பாவியான அவரை கொன்றவர்களை கண்டறிந்து, தண்டிக்க வேண்டும்,'' என்றார்.இதற்கிடையில், தனிப்படை போலீசார், சசிகுமார் கொலையாளி களை தேடி, கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: