வெள்ளி, 30 செப்டம்பர், 2016

தமிழக கர்நாடக நதிநீர் பங்கீடு .. உமா பாரதி தலைமை பேச்சு வார்த்தை தோல்வி !

காவிரி பிரச்னையில் மத்திய அரசு நடத்திய பேச்சு அரசியல் சட்டத்தை கர்நாடகா மீறுவதாக புகார்< காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, கர்நாடகா, தமிழக அரசு பிரதிநிதிகளுக்கு இடையே, மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த கூட்டம், தோல்வியில் முடிந்தது. அரசியல் சட்டத்தை கர்நாடகா அரசு மீறுவதாக, தமிழக அரசு புகார் கூறியுள்ளது. காவிரி விவகாரத்தில் சுமுக தீர்வை எட்டும் முயற்சியாக, தமிழக, கர்நாடக மாநில முதல்வர்க ளின் கூட்டத்தை கூட்டி, பேச்சு நடத்தும்படி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி இருந்தது.இதையடுத்து டில்லியில் நேற்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான உமா பாரதி தலைமை யில் கூட்டம் நடந்தது. தமிழக முதல்வருக்கு பதிலாக, பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். தமிழக தலைமைச் செயலர் ராமமோகன ராவ்,பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.
அண்ணன் - தம்பி< கர்நாடக அரசு சார்பில், முதல்வர் சித்த ராமையா மற்றும் சட்ட அமைச்சர், நீர்ப்பாசன அமைச்சர், அம்மாநில தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

பேச்சு துவங்கியதும், மத்திய அமைச்சர் உமா பாரதி, ''தமிழக அரசும், கர்நாடக அரசும், அண்ணன் தம்பியைப் போல் செயல்பட வேண்டும். இப்பிரச்னையை, நீங்களே பேசி தீர்க்க முடியும்.மூன்றாவது தரப்பான நான் பேசி, எதுவும் செய்துவிட முடியுமா என தெரியவில்லை,'' என்றார்.

பின், கர்நாடக முதல்வர் சித்தராமையாவை பேச அழைத்தார்.அவர் பேசி முடித்ததும், தமிழக முதல்வரின் உரையை, தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வாசித்தார். மிகுந்த நிதானத்து டன் உரையை துவங்கிய அவர், ஒவ்வொரு முறையும், கர்நாடக முதல்வரின் >முகத்தை உற்று நோக்கிய படியே வாசித்து முடித்தார்.<>ராமமோகன ராவ், உரையை வாசித்து முடித்ததும், ஒருசில நிமிடங்களிலேயே கர்நாடக முதல்வரும், அவரது குழுவினரும், கூட்டஅரங்கை விட்டு திடீரென வெளியேறினர். </>வெளிநடப்பு செய்வதைப் போல இருந்த அந்த செய்கையை, அங்கிருந்த யாரும் எதிர்பார்க்க வில்லை.பகல், 12:40க்கு வெளியேறிய சித்த ராமையா குழுவினர், 2:40க்குத் தான், அரங்கிற்குள் மீண்டும் வந்தனர்.


இவர்கள் வரும் வரை, மத்திய அமைச்சர் உமா பாரதி, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக அமைச்சர், அதிகாரிகள் என அனைவருமே அரங்கிற்குள்ளேயே காத்திருந்தனர். இரண்டு மணி நேரம் கழித்து, சித்தராமையாவும், அவரது குழுவினரும் வந்து சேர்ந்ததும் மீண்டும் பேச்சு துவங்கியது.

அப்போது, 'கர்நாடகாவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது; உண்மை நிலையை அறிய வேண்டுமெனில், நிபுணர் குழுவை கர்நாடகாவுக்கு அனுப்புங்கள்' என, கர்நாடகா தரப்பில் வாதிடப்பட்டது. >முடிவு இல்லை</>அதற்கு, தமிழகம் தரப்பில் 'நிபுணர் குழு பேச்செல் லாம் இப்போது தேவையில்லை' என தெரிவிக்கப் பட்டதும், இரு தரப்புக்கும் அனல் பறக்கும் விவாதம் நடந்தது. அப்போது, 'எங்கள் நிலைமையை நேரில் அறிய, நிபுணர் குழுவை அனுப்பி வைத்த பின்தான், வேறு எதையும் காது கொடுத்து கேட்க முடியும்' என, கர்நாடகா அரசு தரப்பில் கறாராக தெரிவிக்கப் பட்டது.

அதற்கு, 'கோர்ட் உத்தரவை முதலில் அமல்படுத்துங் கள்; அதன்பின், நிபுணர் குழு பற்றி பேசலாம்' என, தமிழக அரசு தரப்பில் உறுதியாக தெரிவிக்கப் பட்டது.

இருதரப்பும் தங்கள் நிலையில், சற்றும் விட்டுக் கொடுக்க மறுக்கவே, எந்தவொரு முடிவும் எட்டப் படாமலேயே, கூட்டம்தோல்வியில் முடிவடைந்தது.</ கை குலுக்கல்>கூட்டத்தின் துவக்கத்தில், கர்நாடக முதல்வர் சித்த ராமையா, தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது கைகளை, வலுக்கட்டாயமாக, மத்திய அமைச்சர் உமா பாரதி இழுத்து பிடித்து, கை குலுக்க வைத்தார். >மேலாண்மை வாரியம் கூட்டம் முடிந்து வெளியேறும் போது, மத்திய நீர்வளத்துறை செயலர் சசிசேகரிடம், 'நான்கு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டு, 10 நாட்களாகி விட்டது; அதற்கான நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது' என, கேட்கப்பட்டது. அதற்கு அவர், ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி துவங்கி உள்ளது,'' என்றார்.;'

உதாசீனப்படுத்துகிறது'; முதல்வர் ஜெயலலிதா உரையில் கூறியிருப்ப தாவது: சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்னும், தேவையான அளவு தண்ணீரை திறந்து விட, கர்நாடக அரசு தவறி விட்டது; சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை உதாசீனப்படுத்துகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை, கர்நாடக அரசு, ஒரு முறை கூட செயல்படுத்த வில்லை. தற்போதும், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்க, கர்நாடக அரசு மறுத்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுவதை, மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு, ஜெயலலிதா தெரிவித்துள்ளார். /> சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால் தான், இந்த கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது.
கோர்ட்டுக்கு வெளியில் பிரச்னையை தீர்க்க, ஒரு வாய்ப்பு உருவாகியிருந்தது. ஆனால், இரு மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை; எனவே, கூட்டத்தில் பேசப் பட்ட விஷயங்கள், சுப்ரீம் கோர்ட்டில் முறைப் படி தெரிவிக்கப்படும்.<>உமா பாரதி, மத்திய அமைச்சர் பா.ஜ.,
- நமது டில்லி நிருபர் -   dinamalar.com

கருத்துகள் இல்லை: