மதுரை:முன் ஜாமின் பெற, சசிகலா புஷ்பா எம்.பி., தரப்பினர், போலி
மனு தாக்கல் செய்த தாக, மதுரை புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா, கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப்ராஜா உள் ளிட்டோர் மீது, அவரது வீட்டில் பணிபுரிந்த சகோதரிகள், பாலியல் புகார் அளித்தனர். புகாரை அடுத்து, துாத்துக்குடி போலீசார், மூவர் மீதும், வழக்குப்பதிவு செய்தனர்.இவ்வழக்கில், முன் ஜாமின் கேட்டு சசிகலா புஷ்பா தரப்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வில், சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் கையெழுத்திட வில்லை; கையெழுத்திட்டதாக, பொய்யான தக வலை கோர்ட்டுக்கு தெரிவித்துள்ளதாக, அரசு தரப்பில், கோர்ட்டில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி வேலுமணி, சம்பந்தப்பட்ட வர்கள் மீது, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதுரை போலீசாருக்கு பரிந்துரைத் தார். இதன் அடிப்படையில், மதுரை புதுார் போலீ சார், சசிகலா புஷ்பா, அவரது கணவர் மீது, மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்துள்ளனர்.>இந்த வழக்கில், தன்னையும், குடும்பத்தினரை யும் கைது செய்யாமல் இருக்க, உச்ச நீதி மன்றத்தை அணுகப் போவதாக, சசிகலா புஷ்பா தெரிவித்துள் ளார்.இந்நிலையில் இன்று, துாத்துக்குடி அம்மன்புரத்தில் நடக்கும், நாடார் இன பிரமுகர், வெங்கடேச பண்ணையார் நினைவு தின நிகழச்சியில், கலந்து கொள்வதற் காக, சசிகலா புஷ்பா தமிழகம் வருகிறார். தினமலர்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக