மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற மேல்சபை மாநிலங்களவை உறுப்பினராக தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.டெல்லி மேல்சபையில் எம்.பி.யாக இருந்த
நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதால், அந்த
இடத்துக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில், காலியாக உள்ள அந்த இடத்தை தமிழகத்தை சேர்ந்த இல.கணேசனுக்கு ஒதுக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.>ஏற்கனவே தமிழகத்தில் இருந்து பாஜக
எம்.பி.யாக பொன்.ராதாகிருஷ்ணன் உள்ள நிலையில், இல.கணேசனும் மாநிலங்களவை
உறுப்பினராக நியமிக்கப்படும் பட்சத்தில் தமிழகத்தில் பாஜகவின் பலம் மற்றும்
செல்வாக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பாஜக மேலிடம் கருதுகிறது.>மேலும், மத்திய அரசின் திட்டங்களை
தமிழகத்தில் தீவிரமாக செயல்படுத்தவதற்கு தகுந்த வாய்ப்பாகவும் இதனை
பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் திட்டமிட்டுள்ளது வெப்துனியா.கம
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக