ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

அக்டோபர் 17, 19இல் உள்ளாட்சித் தேர்தல்! திடீர் அறிவிப்பு ! அதிமுக சார்பு தேர்தல் கமிஷன்?


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ஆம் தேதிகள் என்று இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் 1,31,794 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், 12 மாநகராட்சியில் 919 கவுன்சிலர் பதவிகள், 124 நகராட்சிகளில் 3613 கவுன்சிலர்கள், 12,534 சிற்றூராட்சிகளில் 99,324 சிற்றூராட்சி தலைவர் பதவிகள், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 6,471 வார்டு உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடக்கின்றன. தேர்தல் தேதி 17 மற்றும் 19ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது.
வேட்புமனு தாக்கல் நாளை அதாவது 26.9.2016 முதல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 3.10.2016 கடைசி நாள்.
வேட்புமனு பரிசீலனை 4.10.2016 அன்று நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெறும் நாள் 6.10.2016. வாக்கு எண்ணிக்கை 21.10.2016 நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சித் தலைவர்கள் பதவி ஏற்கும் நாள் 2.11.2016.
மொத்தம் 91,098 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். முதல் கட்டமாக அக்டோபர் 17ஆம் தேதியன்று 10 மாநகராட்சிகளுக்கும் திண்டுக்கல், சென்னை மாநகராட்சிகளுக்கு அக்டோபர் 19ஆம் தேதி அன்றும் தேர்தல் நடத்தப்படும். இத்தேர்தலில் மொத்தம் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த நிமிடத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வருகிறது என்று தேர்தல் ஆணையர் சீத்தாராமன் தெரிவித்தார்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: