செவ்வாய், 8 டிசம்பர், 2015

கடலூர் மாவட்டத்திற்கு பொருள்கள் அளிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிகளுக்கு....

Jpegசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களின் மழை வெள்ள நிவாரணப் பணிகளை பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர். இணையம் மற்றும் ஊடகங்களில் இவை குறித்த செய்திகள் ஏராளம் வந்தாலும் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு நிவாரணமும் ஆறுதலும் கிடைப்பது சாத்தியமல்ல. அதை அரசு நினைத்தால் மட்டுமே ஒருங்கிணைத்து முழு ஆற்றலுடன் செய்ய முடியும். ஆனால் அரசு எந்திரமோ அம்மா ஸ்டிக்கரை ஒட்டுவதற்கே ஆள் இல்லாமல் திணறுகிறது. மக்கள் தன்னார்வத்துடன் கொண்டு வரும் பொருட்களை அ.தி.மு.க ரவுடிக் கூட்டம் பறித்துக் கொள்கிறது. மறுப்பவரை சில இடங்களில் தாக்கியும் வருகிறது.
ஜெயலலிதா அரசை நேரடியாக கண்டிக்கத் துப்பற்ற ஊடகங்களோ இதை வெறும் மனிதாபிமான நடவடிக்கையாக மட்டும் சுருக்கி பரபரப்பை தக்க வைக்க முயல்கின்றன. இறுதியில் மக்கள் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று காலம் தள்ளுகிறார்கள். வேறு சில ஓட்டுக் கட்சிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பெயர்பலகை அமைப்புகளோ தமது பெயர் வருவதை உறுதி செய்து கொண்டு பொருட்களை அளிக்கின்றன.

உண்மையான சேவை நோக்கத்துடன் வரும் இளைஞர்களோ அ.தி.மு.க மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டத்து பா.ம.க கட்சிகளின் அடாவடித்தனத்தால் வேதனையுடன் ஊர் திரும்புகின்றனர். இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் நிவாரண நடவடிக்கைகளின் அவலத்தை புரிந்து கொள்ளலாம். மேலும் மக்களுக்குத் தேவை என்ன, எவற்றை அளிக்க வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும், சுகாதார வழிகாட்டல்கள் என்று எவையும் எங்கேயும் இல்லை.
பெருமளவு நிவாரணப் பொருட்கள் கூட முக்கிய சாலைகளின் சந்தை போல அவ்வப்போது அங்கேயே முடிந்து விடுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று அளிப்பது மிகவும் குறைவாகவே உள்ளது. விதிவிலக்காக சில அமைப்பினர், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒருமாதமாகவே மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பினர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் பகுதிகளில் நீரை  வெளியேற்றுவது, சுத்தம் செய்வது, வீடுகளை பழுது பார்ப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக மட்டும் பொருட்கள், உணவு வகைகளை அளித்தும் வருகின்றனர். சென்னையிலும் இந்த பணிகள் பெரும் சிரமத்தில் நடந்து வருகின்றது.
நிவாரணப் பொருட்கள் அளிக்க விரும்புவோர், பணிகளில் பங்கேற்க விரும்புவோர் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுங்கள். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் உதவிகளை எமது தோழர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்ய இயலும்.
கடலூர் மாவட்டத்திற்கு பொருள்கள் அளிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிகளுக்கு லாரி பார்சல் மற்றும் டிராவல்ஸ் மூலம் அளிப்பது முக்கியம். நேரடியாக வரும் பொருட்களை அ.தி.மு.க மற்றும் பா.ம.கவினர் பறிமுதல் செய்வார்கள். போலிசும் அதை வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழியில்லை. லாரி பார்சல் மூலம் வரும் பொருட்களை எமது தோழர்கள் குறிப்பான இடங்களுக்கு சென்று சேர்ப்பார்கள். எமது தோழர்களிடம் மேற்கண்ட கட்சியினர் வாலாட்டுவது இல்லை. சென்னைக்கு நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விட்டு வரலாம்.
கடலூர் மாவட்டத்தில் உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் எண்:
தோழர் து. பாலு,
எண்: 6, கருமாரப்பேட்டை,
மஞ்சக்குப்பம், கடலூர்,
தொலைபேசி எண்: 8110815963
தோழர் பழனிச்சாமி,
எண்: 5, காட்டாமணிக்குப்பம் வீதி,
முத்தியால்பேட்டை, புதுச்சேரி – 3,
தொலைபேசி 9597789801
சென்னையில் உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:
தோழர் வெற்றில்வேல் செழியன்,
மக்கள் அதிகாரம் சென்னை வட்டார ஒருங்கிணைப்பாளர்,
தொலைபேசி எண்: 9176801656
கீழே கடலூர் மாவட்டத்தில் தோழர்கள் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகள் குறித்த படங்கள் இடம்பெறுகின்றன. புகைப்படங்களுக்கு போஸ் மற்றும் முகம் காட்டாமல் பணியில் மற்றும் கவனம் செலுத்தும் தோழர்களை இங்கே காணலாம்.







கருத்துகள் இல்லை: