செவ்வாய், 8 டிசம்பர், 2015

நிவாரண பொருட்களை சூறையாடும் சமுக விரோத கும்பல்கள்...வெளிமாநிலங்களில் இருந்து வரும் நிவாரண பொருட்களை மிரட்டி..

கடலுார்: கனமழையால் மழையால் பாதிக்கப்பட்ட கடலுார் மாவட்டத்தில் நிவாரண உதவி என்ற பெயரில் தொழிலதிபர்கள், வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் பெருகி வருகிறது. கடந்த மாதம் 8ம் தேதி முதல் பெய்து வரும் கனமழையால் கடலுார் மாவட்ட மக்கள் தொழில் மற்றும் உடமைகளை இழந்து மீளா துயரத்தில் இருந்து வருகின்றனர். புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன்காரணமாக கூலித் தொழிலாளிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் பல்வேறு நிவாரணப் பொருட்களுடன் கடலுார் மாவட்டத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கெடிலம் வழியாக கடலுார் மாட்டத்திற்கு நுழைந்த உடன் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.


சாலையில் நின்று கொண்டிருக்கும் கும்பல் பொருட்கள் கொண்டு வரும் வாகனத்தை நிறுத்தி பொருட்களை பிடுங்குவது, டிரைவரை அவதுாறாக பேசுவது, மிரட்டி தங்கள் ஊருக்கு கொண்டு செல்வது, முடிந்தால் பொருட்கள் முழுவதையும் கொள்ளையடிப்பது என போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது.இது தவிர கடைவீதியில் உள்ள பெரிய வியாபாரிகளிடம் கும்பலாகச் சென்று நிவாரணம் என்ற பெயரில் அரிசி வாங்கித் தரும்படி மிரட்டுவது. சரி என ஒப்புக் கொண்டால் அரிசி வாங்கும் தொகைக்கு பணம் கொடுத்தால் குறைந்த விலையில் நாங்களே அரிசி வாங்கிக் கொள்கிறோம் என திசை திருப்பி பணம் பறிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். இதேப்போன்று வெவ்வேறு கும்பல் வந்து பணம் கேட்டு மிரட்டடுவதால் வியாபாரிகள் அதிருப்தியில் உள்ளனர். விரும்பத்தகாத இச்சம்பவங்களால் கடலுார் மாவட்டத்திற்கு நிவாரணப் பொருட்கள் வருவது கனிசமாக குறைந்துள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: