சென்னையில் பெய்த கனமழையால், சுமார் ஒரு லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு வட கிழக்கு பருவழை சென்னை, கடலூர், திருவள்ளூர்
மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது.
மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தெருக்களில் வெள்ளம்
சூழ்ந்துள்ளதால், மக்கள் விட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. பல
இடங்களில், வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால் வீட்டிற்குள் வசிக்க முடியாத
நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் முழுவதும் நிரம்பியதால், அதிலிருந்து பல
ஆயிரம் லிட்டர் தண்ணீர் கூவம் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது. அதனால்
கூவம் ஆற்றை ஒட்டிய குடியிருப்பு பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
அங்கிருந்து மக்கள் வெளியேறி, சாலைகளில் தங்கியிருக்கிறார்கள்.
100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் நவம்பர் மாதம் 108.8 செ.மீ மழை
பெய்துள்ளது. அதன் டிசம்பர் 2 ஆம் தேதியும் கனமழை பெய்தது.
செம்பரம்பாக்கத்தில் இருந்து திறந்து விடப்பட்ட நீரில் ஏராளமன குடிசைகள்,
வீடுகள் சேதமடைந்தன.
முக்கியமாக தாம்பரம், முடிச்சூர், சைதாப்பேட்டை, ஜாபர்கான் பேட்டை,
வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் வீடுகள்
சேதமடைந்தனர். அந்த வீடுகளிலிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கல்,
கம்ப்யூட்டர்கள், செல்போன்கள், டெலிவிஷன்கள், குளிர் சாதனப் பெட்டிகள்
அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சேதம் அடைந்தன. சில
இடங்களில் கார்கள் சில கிலோ மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டு
சாலைகளில் கிடந்தன.
பல வீடுகளில், தாங்கள் வாழ்நாள் முழுக்க உழைத்து சேர்த்து வைத்திருந்த தங்க நகைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதன் மொத்த சேத பாதிப்பு சுமார் 1 லட்சம் கோடி இருக்கும் என வருவாய் உயர் அதிகார் ஒருவர் தெரிவித்தார். webduniya.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக