செவ்வாய், 8 டிசம்பர், 2015

பணம் வேண்டாம் பொருட்களை தாருங்கள் நடிகர் கார்த்தி கோரிக்கை...

சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் இன்று 4–வது நாளாக பல்வேறு இடங்களிலிருந்து வந்த வெள்ள நிவாரண பொருட்களை நடிகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் உதவியுடன் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு பால், பிஸ்கேட், பிரட் போன்ற உணவு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி கூறியதாவது:– சென்னையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தன்னார்வர்கள் மட்டுமின்றி பல நடிகர் மற்றும் நடிகைகள் இதில் கலந்து கொண்டு எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சாந்தனு, ரமணா, சரளா போன்றவர்கள் பொருட்களை நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


தண்ணீரின் அளவு குறைய குறைய மக்களின் தேவை மாறிக் கொண்டேயிருக்கிறது, அதற்கேற்றார்போல நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம். நானும் விஷாலும் வட சென்னைக்கு சென்று அங்கிருக்கும் நிலைமையை அறிந்து அவர்களின் தேவை என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கேற்றவிதத்தில் நிவாரண பொருட்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.

காவல் துறையும் எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல இடங்களில் தண்ணீர் வற்றாத நிலையில் அங்கிருக்கும் பெரும்பாலான குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருப்பது பெரிய வருத்தத்தை தருகிறது.

எம்.ஜி.ஆர் நகர், போரூர் ஆகிய இடங்களில் ரமணாவும், சைதாப்பேட்டையில் சாந்தனு, ஈ.சி.ஆரில் சந்துருவும் இன்னும் பல இடங்களில் பல நடிகர்கள் நிவாரண உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: